Close

Labour Office

MEETING PURTICULARS (2016 / 2017)
S.No Name of Boards Registration Renewal Education Marriage Maternity Spectacles N.Death A.Death Pension Total
Benify Amount Benify Amount Benify Amount Benify Amount Benify Amount Benify Amount Benify Amount Benify Amount
1 Construction Board 2532 3357 3085 5882000 4 12000 1 6000 1 500 14 238000 1 102000 129 6280000 3235 12520500
2 Manual Board 1658 2756 2537 5495100 12 35000 7 21000 8 3950 12 204000 0 0 88 2696000 2664 8455050
3 Auto Board 53 114 104 210200 2 5000 0 0 0 0 0 0 0 0 1 15000 107 230200
GRAND TOTAL 4243 6227 5726 11587300 18 52000 8 27000 9 4450 26 442000 1 102000 218 8991000 6006 21205750

 

MEETING PURTICULARS (2017 / 2018)
S.No Name of Board Registration Renewal Education Marriage Maternity Spectacles N.Death A.Death Pension Total
Benify Amount Benify Amount Benify Amount Benify Amount Benify Amount Benify Amount Benify Amount Benify Amount
1 Construction Board 2438 880 3772 25407300 30 114000 0 0 2 1000 17 289000 5 1708000 383 10063000 4209 37582300
2 Manual Board 1032 745 1652 3413050 13 55000 4 12000 7 3500 8 136000 1 102000 131 6071000 1816 9792550
3 Auto Board 55 17 92 187200 1 5000 0 0 0 0 1 17000 1 102000 2 37000 97 348200
GRAND TOTAL 3525 1642 5516 29007550 44 174000 4 12000 9 4500 26 442000 7 1912000 516 16171000 6122 47723050

Office  No  : 04575-240320,240321

Mobile No :  9566281424

Email          :  lossssivagangai(at)gmail(dot)com

 

தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள்

தமிழ்நாட்டிலுள்ள அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் பணி நிலைமைகளை ஒழுங்குபடுத்தவும், அவர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்கவும் தமிநாடு அரசு 1982ம் ஆண்டில் தமிழ்நாடு உடல் உழைப்புத் தொழிலாளர்கள் (வேலை வாய்ப்பு மற்றும் பணி நிலைமைகள் முறைப்படுத்துதல்) சட்டத்தினை இயற்றியது.

தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் 17 நல வாரியங்கள்

1. தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம்
2. தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சமூக பாதுகாப்புத் திட்டம்
3. தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் நல வாரியம்
4. தமிழ்நாடு சலவைத் தொழிலாளர்கள் நல வாரியம்
5. தமிழ்நாடு முடித்திருத்துவோர் நல வாரியம்
6. தமிழ்நாடு தையல்  தொழிலாளர்கள் நல வாரியம்
7. தமிழ்நாடு கைவினைத் தொழிலாளர்கள் நல வாரியம்
8. தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியம்
9. தமிழ்நாடு  கைத்தறி மற்றும் கைத்தறிப்பட்டு நெய்யும் தொழிலாளர்கள் நல வாரியம்
10. தமிழ்நாடு காலணி, தோல் பொருட்கள் உற்பத்தி மற்றும் தோல் பதனிடும்  தொழிலாளர்கள் நல வாரியம்
11. தமிழ்நாடு ஓவியர்  நல வாரியம்
12. தமிழ்நாடு  பொற்கொல்லர்  நல வாரியம்
13. தமிழ்நாடு  மண்பாண்டத்  தொழிலாளர்கள் நல வாரியம்
14. தமிழ்நாடு  வீட்டுப் பணியாளர்கள் நல வாரியம்
15. தமிழ்நாடு விசைத்தறி நெசவாளர்கள் நல வாரியம்
16. தமிழ்நாடு  பாதையோர வணிகர்கள் கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் நல வாரியம்
17. தமிழ்நாடு சமையல் தொழிலாளர்கள் நல வாரியம்

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம்

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் 30.11.1994 அன்று அரசால் ஏற்படுத்தப்பட்டது. இவ்வாரிய நலத்திட்டத்தினை அட்டவணையில் குறிப்பிட்டுள்ள தொழில் இனங்கள் ஆகிய 53 வகையான தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

53 வகையான அமைப்புசாரா தொழில்கள்

1. கல் உடைப்பவர்(அ)கல் வெட்டுபவர்(அ) கல் பொடி செய்பவர்
2. கொத்தனார்(அ)செங்கல் அடுக்குபவர்
3. தச்சர்.
4. பெயிண்டர் அல்லது வார்னி` பூசுபவர்
5. கம்பி வளைப்பவர் உட்பட பிட்டர்
6. சாலைகுழாய் பதிப்பு பணியாளர்
7. எலக்ட்ரிசியன்
8. மெக்கானிக்
9. கிணறு தோண்டுபவர்
10. வெல்டர்
11. தலைமை கூலியாள்
12. கூலியாள்
13. தெளிப்பவர் மற்றும் கலப்பவர்(சாலை பரப்பும் பணி)
14 மரம் அல்லது கல் அடைப்பவர்
15 கிணற்றில் துார் எடுப்பவர்
16 சட்மட்டி ஆள்
17 கூரை வேய்பவர்
18 மேஸ்திரி
19 கருமான், கொல்லன்
20 மரம் அறுப்பவர்
21 சந்துகள் அடைத்து நீர் உட்புகாமல் செய்பவர்
22. கான்க்ரீட் மிக்ஸர் ஆபரேட்டர் உட்பட கலப்பவர்
23. பம்ப் ஆபரேட்டர்
24. மிக்ஸர் டிரைவர்
25. ரோலர் டிரைவர்
26. கனரக இயந்திர கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள கலாசிஸ் மற்றும் சரங் பணியாளர்
27 காவலாளி
28 மொசைக் பாலீஸ் செய்பவர்
29 சுரங்க வழி தோண்டுபவர்
30 பாறை உடைப்பவர் குவாரி வேலையாள்
31 சலவைக்கல் ஃ கடப்பாக்கல் வேலையாள்
32 சாலை பணியாளர்
33 கட்டுமானப் பணி தொடர்பான மண் வேலை செய்பவர்
34. சுண்ணாம் பதப்படுத்துவோர்
35 கடல் அரிப்பு தடுப்பு பணியில் ஈடுபடும் வேலையாள்
36. அணைகள் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு,பாலங்கள், சாலை அல்லது மற்ற கட்டுமானப் பணிகளில் உள்ளபடியாக ஈடுபட்டுள்ள மற்ற வகையான தொழிலாளர்கள்
37. தொழிற்சாலை சட்டத்தின் கீழ் வராத செங்கல் சூளை தொழிலாளர்கள்
38. பந்தல் கட்டுமானம்
39. தீயணைப்பு கருவிகளை பொருத்துதல் மற்றும் பழுதுபார்த்தல்
40. குளிரூட்டுதல் மற்றும் சூடுபடுத்துதல் கருவிகளை  பொருத்துதல் மற்றும் பழுதுபார்த்தல்
41. மின் துாக்கி மற்றுமு மின்படி பொருத்துதல்.
42. பாதுகாப்பு கதவுகள் மற்றும் கருவிகள் பொருத்துதல்.
43. இரும்பு மற்றும் உலோக கிராதி, ஜன்னல், கதவுகள் புனைத்து கட்டுதல் மற்றும் பொருத்துதல்
44 நீர் எடுக்கும் கட்டமைப்பு தொடர்பான கட்டுமானம்
45 கார்பெட்டிங், பொய்கூரை, விளக்கு அமைத்தல், மேற்பூச்சுதல் தொடர்பான உள்ளலங்காரம்
46 கண்ணாடி வெட்டுதல், இழைத்தல் மற்றும் கண்ணாடி பேனல்கள் பொருத்துதல்
47. சோலார் பேனல் போன்ற இடங்களில்  நவீன அறைகலன் அமைத்தல்
48. சமையல் கூடம் போன்ற அடங்களில் நவீன அறைகலன் அமைத்தல்
49. முன் புனைத்து அமைக்கப்பட்ட கான்கிரீட் பொருட்கள் பொருத்துதல்
50. கோல்ப் மைதானம், நீச்சல் குளம் உட்பட்ட விளையாட்டு மற்றும் பொழுது போக்கு அரங்குகளை கட்டுதல்.
51 கல்பெயர்ப்பலகை, தெரு அறைகலன்கள், பேருந்து நிழற்கூரை, பணிமனைகள் நிறுத்தங்கள் மற்றும் அறிவிப்பு குறி போன்ற கட்டுமானம் மற்றும் நிறுத்துதல்.
52. ரோட்டரி மற்றும் செயற்கை நீர்ரூற்று போன்ற கட்டுமானம்
53. பொதுபூங்கா, நடைபாதை போன்ற கட்டுமானம் மற்றும் இயற்கை நிலைகாட்சி அமைத்தல்

தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு நல வாரியம் மற்றும் 15 நல வாரியங்கள்

தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சமூக பாதுகாப்புத் நல வாரியம் 17.03.1999 அன்று அரசால் ஏற்படுத்தப்பட்டது. இவ்வாரியங்கள் மூலம் நலத்திட்டங்களில் பட்டியலிடப்பட்ட தொழில் இனங்கள் ஆகிய 60 வகையான தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. 2000ஆம் ஆண்டு அரசு உடலுழைப்புத் தொழிலாளர் நல வாரியத்தில் இருந்து சில தொழில்களை பிரித்து அந்தத் தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கென்று தனித்தனி நல வாரியங்கள் அமைக்கப்பட்டது.

1. சுமை ஏற்றுதல், இறக்குதல், அடுக்குதல், சிப்பம் கட்டுதல், துாக்கிச் செல்லுதல், எடைபோடுதல், அளவிடுதல் அல்லது இத்தகைய வேலைகளுக்கான ஆயத்த அல்லது இது தொடர்பான பணி உள்ளிட்ட உடலுழைப்பு வேலைகளில் ஈடுபடுதல்
சந்தை,கடை, டிப்போ, தொழிற்சாலை, சேமிப்புக் கிடங்கு, கிடங்கு அல்லது இதர நிறுவனம்.
1948-ஆம் வருட துறைமுகத் தொழிலாளர் சட்டத்திற்குட்படாத துறைமுகங்கள்.
இரயில்வே நிர்வாகத்தால் பணியமர்த்தப்படாத உடலுழைப்புத் தொழிலாளர்கள் பணிபுரியும் இரயில்வே யார்டுகள் மற்றும் குட்ஸ்`ெட்டுகள்
1959-ஆம் வருட தமிழ்நாடு வேளாண் விளை பொருள் சந்தைகள் சட்டத்தால் அமைக்கப்பட்ட சந்தைக் குழுக்களின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட சந்தை.
2 பொது போக்குவரத்து வாகனங்களில் சுமை ஏற்றுதல், இறக்குதல் மற்றும் அது தொடர்பான இதர வேலைகள்
3 உணவு தானியங்கள் ஏற்றுதல், இறக்குதல் மற்றும் கிடங்குகளுக்கு கொண்டு செல்லுதல், உணவு தானியங்களை பிரித்தல் மற்றும் சுத்தம் செய்தல், உணவு தானியங்களை பைகளில் நிரப்புதல் மற்றும் அற்த பைகளை தைத்தல் மற்றும் இதன் தொடர்புடைய இதர வேலைகள்
4 உப்பளங்களில் வேலை செய்தல்
5 கள் இறக்குதல் தொழில்.
6 படகு பணி.
7 மரத்தொழில்.
8 கயிறு தொழில்
9 தோல் பதனிடுதல் மற்றும் தோல் உற்பத்தி
10 தானியங்கி பணிமனையில்(ஆட்டோ மொபைல் ஒர்க்`ாப்) பணிபுரிதல்.
11 அப்பளம் தயாரித்தல்
12. வெளுத்தல் மற்றும் சாயத் தொழில்
13. மாட்டு வண்டி ஓட்டுதல்
14. உணவு சமைத்தல்
15. தேங்காய் உரித்தல்
16. வனப் பொருட்கள் சேகரித்தல்
17. உணவு நிறுவனங்களில் பணிபுரிதல்.
18. முந்திரி தொழில்
19. ஆட்டோ, டாக்சி, வேன், டெம்போ, லாரி மற்றும் பேருந்து ஓட்டுதல்(அரசுத் துறை வாகனங்கள் நீங்கலாக)
20. எல்.பி.ஜி. சிலிணடர் ஓட்டுதல்
21. சைக்கிள் ரிக்`ா ஓட்டுதல்.
22. பொறியியல் தொழில்.
23. பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழில்
24. துணி மடிக்கும் தொழில்
25. காலணி மற்றும் தோல் பொருட்கள் தயாரித்தல்
26 சாக்குத் தொழில்
27. தங்க , வெள்ளி ஆபரணங்கள் தயாரித்தல்.
28 கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெய்தல்
29 அகர்பத்தி தயாரித்தல்.
30 துணி துவைத்தல் மற்றும் சலவை இடுதல்
31. பதநீர் இறக்குதல்
32. பேனா எழுதுமுனை தயாரித்தல்
33. மாவு ஆலை, எண்ணெய் ஆலை, பருப்பு ஆலை மற்றும் அரிசி ஆலையில் பணி புரிதல்
34 அச்சகங்களில் பணிபுரிதல்.
35. விசைத்தறித் தொழில்
36. தனியார் பாதுகாவல் பணிகள்
37. பிளாஸ்டிக் தொழில்
38. மண்பாண்டத் தொழில்
39. குப்பைகள் சேகரித்தல்
40. முடிதிருத்துதல் மற்றும் அழகு நிலையங்களில் பணிபுரிதல்
41. தெரு வியாபாரம்.
42. ஜவ்வரிசி தொழில்
43. செயற்கை வைரம் வெட்டுதல்
44. பட்டுப்புழு வளர்த்தல்.
45. கடைகள் மற்றும் றிறுவனங்களில் பணிபுரிதல்
46. தையல் தொழில்
47. மரம் ஏறுதல்
48. தகர அடைப்பான்கள் தயாரித்தல்
49. பாத்திரங்கள் தயாரித்தல்
50. மரவேலைக் கூடங்களில் பணிபுரிதல்
51. வீட்டு வேலைகளில் பணிபுரிதல்
52. சைக்கிள் பழுது பார்த்தல்
53. கல் மற்றும் பிற பொருட்களில் சிற்ப வேலைகள் செய்தல்
54. களிமண், காகித கூழ் உட்பட பிற பொருட்களில் கைவினைப் பொருட்கள் செய்தல்.
55. சுருட்டு தயாரித்தல்
56. ஓவியர்கள்
57. வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தல்
58. ஒலி மற்றும் ஒளி அமைத்தல்
59. எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் உபகரங்களை பழுது பார்த்தல் மற்றும் சீர் செய்தல்
60. வார்த்து வடித்தல்

பதிவு செய்வதற்கான தகுதிகள் – வழிமுறைகள்

விண்ணப்பதாரர் 18 வயது முதல் – 60 வயதுக்குள் இருத்தல் வேண்டும். 

  1. தொழிலாளி தனது புகைப்படம் ஒன்றை விண்ணப்பத்தில் ஒட்டி, மற்றொரு புகைப்படத்தை ஒரு உறையில் வைத்து விண்ணப்பத்துடன் இணைத்து விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து தொழிலாளர்கள் நேரடியாக தொழிலாளர் உதவி ஆணையர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்தில் அளித்து ஒப்புதல் சீட்டு பெற்றுக் கொள்ள வேண்டும்.
  2. பதிவு கட்டணம் ஏதும் இல்லை.

பதிவு விண்ணப்பத்தில் சம்பந்தப்பட்ட தொழிலில் ஈடுபட்டுள்ளவர் என்பதற்கான சான்று கீழ்க்கண்ட எவரேனும் ஒருவரால் அளிக்கப்பட வேண்டும்.

  • வேலையளிப்பவர்.
  • பதிவு பெற்ற ஒப்பந்ததாரர் (கட்டுமான வாரியம் மட்டும்)

கட்டுமானத் தொழிலில் ஈடுபடும் அரசு அமைப்புகள் அல்லது நிறுவனங்கள் (கட்டுமான

  • வாரியம் மட்டும்)
  • பதிவு பெற்ற தொழிற்சங்கம்.
  • கிராம நிர்வாக அலுவலர் ஃ வருவாய் ஆய்வாளர்(சென்னை மாவட்டத்தில் மட்டும்)

தொழிலாளர் உதவி ஆய்வாளர் அல்லது உதவி இயக்குநர், தொழிலக பாதுகாப்பு மற்றும்

சுகாதாரம்(தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் நல வாரியம் மற்றும் இதர 15 நல

வாரியங்களுக்கு மட்டும்) 

  1. பதிவு விண்ணப்பத்தில், தொழிலாளர் செய்யும் வேலை குறித்த பணிச்சான்றினை தொழிற்சங்கம் வழங்கியிருந்தால், தொழிற்சங்கப் பதிவு எண் மற்றும் முகவரியுடன் கூடிய முத்திரை இடம் பெற்றிருக்க் வேண்டும்.
  • வயது ஃ இருப்பிடம் கீழ்கண்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் சான்றொப்ப நகலினை (யுவவநளவநன ஊழில)விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
  • பிறப்பு ஃ இறப்பு பதிவாளரின் சான்று.
  • பள்ளி கல்லுாரிச் சான்று .
  • வாகன ஓட்டுநர் உரிமநகல்.
  • தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை நகல்.
  • அரசு மருத்துவரிடமிருந்து (சிவல் சர்ஜன் தரத்தில்) பெறப்பட்ட வயது குறித்த சான்று (அசலில்)
  • தேசியமயமாக்கப்பட்டவங்கி கணக்கு புத்தக நகல்.

ஆதார் அட்டை(கூடுதல் ஆவணமாக பெறப்படுகிறது)

பதிவினை புதுப்பித்தல்

ஐந்து வருடத்திற்கு ஒரு முறை பதிவினை புதுப்பித்துக்கொள்ள வேண்டும். புதுப்பித்தலுக்கு கட்டணம் ஏதும் இல்லை. 60 வயது நிறைவடைந்த தொழிலாளியின் பதிவினை புதுப்பிக்க இயலாது. உறுப்பினரால் அளிக்கப்படும் புதுப்பித்தல் விண்ணப்பம் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்தில் பெறப்பட்டு, உரிய சரிபார்ப்புக்கு பின் புதுப்பிக்கப்பட்டு அடையாள அட்டை உறுப்பினருக்கு திரும்ப அளிக்கப்படும்.

இரண்டாம் அடையாள அட்டை(னுரடஉையவந ஐ.னு. ஊயசன)

இரண்டாம்படி அடையாள அட்டை வழங்கக் கோரும் மனு (ரூ.20ஃ- கட்டணத்துடன்) தொழிலாளரின் விண்ணப்பத்தின் மீது நேரடி விசாரணை மேற்கொண்டு இரண்டாம்படி அடையாள அட்டை (னுரடஉையவந ஐ.னு.ஊயசன) கோரும் நபர் அவர்தானா என உறுதி செய்து தொழிலாளர் உதவி ஆணையரால் (சமூக பாதுகாப்புத் திட்டம்) இரண்டாம்படி அடையாள அட்டை வழங்கப்படும்.

நலத்திட்ட உதவிகள் வங்கி கணக்கில் செலுத்துதல்(நுஊளு)

அரசாணை எண.102 நாள்: 08.11.2011 (தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை)–ன்படி இவ்வாரியங்களின் நலத் திட்ட உதவிகளுக்கான பணப்பயன்கள் நேரடியாக பதிவு பெற்ற தொழிலாளியின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.

பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

கல்வி

(ஒவ்வொரு கல்வி ஆண்டிற்கும் பதிவு பெற்ற தொழிலாளியின் குழந்தைகள் இருவருக்கு மட்டும்)

 

அனுமதிக்கப்படும் தொகை

10-ம் வகுப்பு படிப்பதற்கு                        (பெண் குழந்தைகளுக்கு மட்டும்) ரூ. 1000ஃ-
11-ம் வகுப்பு படிப்பதற்கு                        (பெண் குழந்தைகளுக்கு மட்டும்) ரூ. 1000ஃ-
12-ம் வகுப்பு படிப்பதற்கு                        (பெண் குழந்தைகளுக்கு மட்டும்) ரூ. 1500ஃ-
10-ம் வகுப்பு தேர்ச்சி ரூ. 1000ஃ-
12-ம் வகுப்பு தேர்ச்சி ரூ. 1500ஃ-
 முறையான பட்டப்படிப்பு ரூ. 1500ஃ-
 முறையான பட்டப்படிப்பு (விடுதியில்

தங்கி படித்தால்)

ரூ. 1750ஃ-
 முறையான பட்ட மேற்படிப்பு ரூ. 4000ஃ-
 முறையான பட்ட மேற்படிப்பு                      (விடுதியில் தங்கி படித்தால்) ரூ. 5000ஃ-
தொழிற் நுட்பப் பட்டப் படிப்பு சட்டம், பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம் போன்ற தொழிற்நுட்பப் பட்டப்படிப்பு  

ரூ. 4000ஃ-

தொழிற் நுட்பப் பட்டப் படிப்பு சட்டம், பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம் போன்ற தொழிற்நுட்பப் பட்டபடிப்பு                   (விடுதியில் தங்கி படித்தால்)  

ரூ. 6000ஃ-

தொழிற்நுட்பப் பட்ட மேற்படிப்பு ரூ. 6000ஃ-
தொழிற்நுட்பப் பட்ட மேற்படிப்பு

(விடுதியில் தங்கி படித்தால்)

ரூ. 8000ஃ-
ஐ.டி.ஐ அல்லது பாலிடெக்னிக் படிப்பு ரூ. 1000ஃ-
ஐ.டி.ஐ அல்லது பாலிடெக்னிக் படிப்பு ரூ. 1200ஃ-
திருமணம்

(குடும்பத்திற்கு இருமுறை மட்டும்) தொழிலாளர்(அ) தனது மகன் (அ) மகள் திருமணத்திற்கு

 

 

ரூ. 3இ000ஃ-(ஆண்)

ரூ. 5இ000ஃ-(பெண்)

மகப்பேறு

(பதிவு பெற்ற பெண் தொழிலாளர்களுக்கு முதல் இரு குழந்தைகளுக்கும் முறை மட்டும்)

கருக்கலைப்புஃகருச்சிதைவு

(பதிவு பெற்ற பெண் தொழிலாளர்களுக்கு இரு முறை மட்டும்)

 

 

ரூ. 6000ஃ-

 

 

ரூ. 3000ஃ-

கண் கண்ணாடி

உதவித் தொகை(ஒரு முறை)

ரூ. 500ஃ-க்கு மிகாமல்
ஓய்வூதியம்

60 வயது நிறைவு செய்த பதிவு பெற்ற தொழிலாளியாக இருக்க வேண்டும். அல்லது 60 வயதினை நிறைவு செய்யாதிருந்து நோயின் காரணமாக வழக்கமான பணி செய்ய இயலாமல் முடக்கம் ஏற்பட்டிருக்க வேண்டும்.

குடும்ப ஓய்வூதியம்

ஓய்வூதியம் பெறும் கட்டுமானத் தொழிலாளி இறந்து விட்டால் அவரது கணவர் ஃ மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம்

 

 

 

ரூ. 1000ஃ-(மாதம் ஒன்றுக்கு)

 

 

 

ரூ. 400ஃ-(மாதம் ஒன்றுக்கு)

இயற்கை மரணம்

நியமனதாரருக்கு மட்டும்

ஈமச்சடங்கு

நியமனதாரருக்கு மட்டும்

 

ரூ. 20,000ஃ-

 

 

ரூ. 5,000ஃ-

விபத்து மரணம்

விபத்து மரண உதவித்தொகை

 

ரூ.  1,00இ000ஃ-

 

பணியிடத்தில் விபத்து மரணம் ரூ.5,00இ000         (கட்டுமான தொழிலாளர்களுக்கு மட்டும்)

 

பணியிடத்தில் விபத்து மரணம் (பதிவு பெறாத கட்டுமானத் தொழிலாளிக்கு மட்டும்) ரூ. 5,00இ000

நல உதவி விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்

  • பொதுவான ஆவணங்கள்
  • அசல் அடையாள அட்டை
  • வங்கி கணக்கு புத்தக நகல்
  • குடும்ப அட்டை நகல்

ஆதார் அட்டை(கூடுதல் ஆவணமாக பெறப்படுகிறது.) 

  • திருமணம்
  • திருமண அழைப்பிதழ்
  • திருமணம் நடைபெற்றதற்கான சான்று
  • திருமணம் செய்து கொள்பவர்

ஆண் எனில் 21 வயதும், பெண் எனில் 18 வயதும் நிறைவு செய்தார் என் நிருபிக்கும் வயது சான்றிதழ்

  • மகப்பேறு
  • அசல் பிறப்புச் சான்றிதழ்

குறைப்பிரசவம் ஃ கருக்கலைப்பு எனில் பதிவு பெற்ற மருத்துவரின் சான்று. (உதவி சிவில் சர்ஜன் தரத்தில்)

  • கல்வி
  • கல்வி பயிலும் ஆண்டிலேயே விண்ணப்பிக்க வேண்டும்.
  • பள்ளித் தலைமை ஆசிரியரிடமிருந்து பெறப்படும் படிப்பு சான்றிதழில் பதிவு பெற்ற தொழிலாளியின் மகன் ஃ மகள் என்றும் கல்வி பயிலும் ஆண்டினையும் குறிப்பிட வேண்டும்.
  • சான்றொப்பமிட்ட தேர்ச்சி பெற்ற மதிப்பெண் பட்டியல்ஃ பள்ளி மாற்று சான்றிதழ்.
  • கல்லுாரி படிப்பில் சேர்ந்து பயில்வது குறித்தான கல்வி நிலைய முதல்வரிடமிருந்து பெறப்பட்ட அசல் சான்றிதழ்.

விடுதியில் தங்கி படிப்பவர் பள்ளி ஃ கல்லுாரி முதல்வரிடம் அல்லது விடுதி காப்பாளரிடம் இருந்து பெறப்பட்ட சான்று..

கண்கண்ணாடி

கண் மருத்துவரின் பரிசோதனைச் சான்று கண் கண்ணாடி வாங்கியதற்கான அசல் பற்றுச் சான்று

ஓய்வூதியம்

இரண்டு பாஸ்போர்ட் அளவு போட்டோ. மருத்துவச் சான்று அரசு சிவல் சர்ஜனால் வழங்கப்பட்டது. (முடக்க ஓய்வூதியத்திற்கு மட்டும்)

குடும்ப ஓய்வூதியம்

இரண்டு பாஸ்போர்ட் அளவு போட்டோ, ஓய்வூதியதாரரின் அசல் இறப்பு சான்றிதழ், வாரிசு உரிமைச் சான்றிதழ்

  • விபத்து மரணம்
  • அசல் இறப்பு சான்றிதழ்
  • முதல் தகவல் அறிக்கை

பிரேதப் பரிசோதனை அறிக்கை

  • விபத்து ஊனம்
  • (உதவித்தொகை ரூ உதவி உபகரணம்)
  • மருத்துவச்சான்று
  • பணித்திறன் இழப்புச் சான்று (சிவில் சர்ஜனால் வழங்கப்பட்டது)
  • முதல் தகவல் அறிக்கை