மூடுக

மாவட்டம் பற்றி

சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டமாகும். சிவகங்கை மாவட்டம் அரசு ஆணை எண். 1122 – வருவாய் தேதி 06/07/1984 படி, இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு அரசு ஆணை எண். 346 வருவாய் தேதி 08/03/1985 படி 15/03/1985 முதல் செயல்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டம் மக்கள் தொகையில் 27 ஆவது மிகப்பெரிய மாவட்டமாக உள்ளது. மேலும் மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிலோமீட்ருக்கு 324 ஆக உள்ளது. 1000 ஆண்களுக்கு 1,003 பெண்கள் வசிக்கின்றனர். சிவகங்கை மாவட்டம் 9˚.43 ‘மற்றும் 10˚.22’ வடக்கு அட்சரேகை மற்றும் 77˚. 47 ‘மற்றும் 78˚.49’ கிழக்கு தீா்க்க ரேகையில் அமைந்துள்ளது. இதன் வடகிழக்கில் புதுக்கோட்டை மாவட்டம், வடகிழக்கில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், தென்கிழக்கில் இராமநாதபுரம் மாவட்டம், மேற்குத் திசையில் விருதுநகர் , மதுரை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் எல்லையாக அமைந்துள்ளன. மேலும் வாசிக்க

மாவட்ட விவரங்கள்

பொது:

மாவட்டம்: சிவகங்கை
தலைமையகம்: சிவகங்கை
மாநிலம்: தமிழ்நாடு
பரப்பளவு: 4189 ச.கி.மீ

மக்கள் தொகை:

மொத்தம்: 13,39,101
ஆண்கள்: 6,68,672
பெண்கள்: 6,70,429
நகர்ப்புற மக்கள்: 4,12,845
கிராமப்புற மக்கள்: 9,26,256
பாலின விகிதம்: 1003/1000