மூடுக

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

மாவட்ட நிர்வாகத்தில் மாவட்ட ஆட்சியரகம் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. இந்திய ஆட்சி பணி அதிகாரி மாவட்ட ஆட்சித்தலைவராக நியமிக்கபட்டு மாவட்ட நிர்வாகத்தை வழிநடத்துகிறார். அவரே மாவட்ட மாவட்ட நிர்வாக நடுவராக இருந்து சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுவதை உறுதி செய்கிறார். அவர் மாவட்டத்தின் திட்டம் மற்றும் வளர்ச்சி பணிகள், சட்டம்,ஒழுங்கு நிர்வாகம், பொது தேர்தல், துப்பாக்கி உரிமம் போன்ற பல முக்கிய பணிகளையும் செயல்படுத்துகிறார்.

கூடுதல் மாவட்ட ஆட்சியர்/மாவட்ட வருவாய் அலுவலர் வருவாய் துறையின் நேரடி நிர்வாகத் தலைவராகயிருந்து மாவட்டத்தில் வருவாய்த்துறை சட்டங்களின் செயல்பாட்டினை உறுதிசெய்கிறார். அவர் மாவட்ட கூடுதல் நிர்வாக நடுவராகவும் செயல்படுகிறார். குடிமை பொருட்கள் வழங்கல், நில நிர்வாகம், கனிமம் மற்றும் கனிமப்பொருட்கள் சட்டங்கள், கிராம நிர்வாகம் போன்றவை அவரது முக்கிய பணிகளாகும். வருவாய் துறையின் அனைத்து பிரிவுகளையும் நிர்வகித்து, தினசரி நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதும் இவரது பணியாகும். உதவி ஆட்சியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பிரிவுகளின் வேலைகளை நிர்வகித்து மாவட்ட ஆட்சியருக்கு உறுதுனையாக இருக்கிறார்கள்.

இந்திய ஆட்சிப்பணி அலுவலர்/மாவட்ட வருவாய் அலுவலர் மட்டத்தில், நியமிக்கப்படும் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட அலுவலர் , மற்றும் துனை ஆட்சியர் மட்டத்தில் நியமிக்கப்படும் அலுவர்கள் ஊரக உள்ளாட்சித்துறையின் திட்டம் மற்றும் வளர்ச்சி பணிகளை செயல் படுத்துவதில் ஆட்சியருக்கு உறுதுனையாக உள்ளனர். பேருராட்சிகளின் உதவி இயக்குனர், நகராட்சி கமிஷனர்கள் நகர்புற உள்ளாட்சிதுறை நிர்வாகத்தினை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியருக்கு உறுதுனையாக உள்ளனர்.

வருவாய்

  1. பிரிவு அ – இந்திய ஆட்சிப்பணி, குடிமைப்பணி மற்றும் அனைத்து பணியமைப்புகள் – அலுவலக நடை முறை சார்நிலை அலுவலகங்கள் ஆய்வு
  2. பிரிவு பி – பட்டா மாற்றம் மேல் முறையடு நில உடைமை மேம்பாடு – வெளிநாடு வாழ் இந்தியர்கள் இறப்பு – வனங்கள் – நத்தம் மேல்முறையடு – மக்கள் தொகை கணக்கெடுப்பு – வருவாய் வசூல் சட்டம் – ஜமாபந்தி – சான்றிதழ்கள்.
  3. பிரிவு சி – நிலம் கையகப்படுத்துதல், நில உரிமை, நிலமாற்றம், ஒப்படை
  4. பிரிவு டி – குற்றவியல் சட்டம் மற்றும் ஒழுங்கு, டி.என்.ப்பி.ஐ.டி சட்டம் குண்டாஸ் மற்றும் சட்ட அலுவலர்கள்
  5. பிரிவு இ – தேர்தல், அகதிகள் மறுவாழ்வு, வழக்குகள் அம்மா திட்டம், ஆக்கிரமிப்புகள்
  6. பிரிவு எப் – சுத்த நகல் பிரிவு
  7. பிரிவு ஜி – பதிவுறுக்கள், நீர்ப்பாசனம், அரசிதழ் வெளியடு ‘ஜி”- ரிட்டர்ன் விவசாயம் – புள்ளிவிபரங்கள்
  8. பிரிவு எச் – முக்கிய பிரமுகர் வருகை, ஈப்பு விருந்தினர் மாளிகை ஒதுக்கீடு – கட்டிடங்கள் விடுதலை வீரர் ஓய்வுதியம். இலவச வேட்டி / சேலை – பல்வகை இனங்கள்
  9. பிரிவு ஐ – மக்கள் குறை தீர்க்கும் பிரிவு, மனு நீதி நாள் முகாம் – மு.பொ. நிவாரண நிதி, முதியோர் உதவித் தொகை, மற்றும் விபத்து நிவாரணங்கள்
  10. பிரிவு கே – சம்பளம் / பயணப்பட்டியல்கள், பணிப்பதிவேடு பராமரித்தல், மற்றும் இதர செலவினங்கள்
  11. பிரிவு எல் – கடனும், முன்பணமும், ஒத்திசைவு, பட்ஜெட் ஊதிய நிர்ணயம்
  12. பிரிவு என் – நிலக்குத்தகை நிலவரித்திட்ட பணிகள், தஸ்திக் கொடை
  13. பிரிவு எஸ் – குடிமைப் பொருள் மற்றும் பொது விநியோகத் திட்டம்
  14. பிரிவு ஒய் – பிற்பட்டோர் நலம் / சிறுபான்மையினர் நலம்
  15. பிரிவு டபிள்யு – ஆதிதிராவிடர் / பழங்குடியினர் நலம்
  16. ச.பா.தி – முதலமைச்சரின் விரிவான உழவர் பாதுகாப்பு திட்டம்
  17. ஆயத்தீர்வை – மாநில ஆயத்தீர்வை – டாஸ்மாக் மேலாண்வை

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

  1. திட்ட இயக்குனர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) – ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்
  2. திட்ட அலுவலர் (தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம்) – மகளிர் திட்டம்
  3. நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) – வளர்ச்சி
  4. உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) – கிராம பஞ்சாயத்துகள்
  5. உதவி இயக்குனர் (தணிக்கை) – தணிக்கை மற்றும் உயர்மட்ட குழு
  6. நேர்முக உதவியாளர் (சத்துணவு) – பள்ளி சத்துணவு திட்டம்