மூடுக

நில அளவை

சிவகங்கை மாவட்டத்தில் நில அளவை பணிகளை பொறுத்தமட்டில் புலப்படங்கள் கணிணிமயமாக்குதல், நத்தம் மற்றும் நகர ஆவணங்கள் கணிணிமயமாக்கல், கணிணிமயமாக்கப்பட்ட நில அளவை ஆவணங்களை பராமரித்தல் மற்றும் இணையவழி பட்டா மாறுதல் குறித்த பணிகள் நடைபெற்று கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இணைய வழி பட்டா மாறுதல் :

இம்மாவட்டத்தில் இணைய வழி பட்டா மாறுதல் தமிழ்நிலம் மென்பொருள் மூலமாக 1.11.2015 முதல் இன்றளவில் பட்டா மாறுதல் முழுப்புலம் மற்றும் உட்பிரிவு புலங்கள் பொதுமக்களிடமிருந்து மனுக்களை நேரடியாக பெறாமல் கூட்டுறவு சங்கங்கள் வட்ட அலுவலகங்களில் உள்ள இ-சேவை இதுபோன்ற பொது சேவை மையங்கள் மூலமாக மனுக்களை பெற்று இணைய வழியில் பட்டா வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இணைய வழி பட்டா மாறுதல் மனுக்களில் முழுப்புலங்கள் கிராம நிர்வாக அலுவலர் மூலமாகவும், உட்பிரிவு இனங்கள் குறுவட்ட அளவர் மூலமாகவும் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு பொதுமக்களுக்கு இணைய வழிப்பட்டா மாறுதல் உத்திரவுகள் வழங்கப்பட்டு வருகிறது. வழங்கப்பட்ட இணையவழி பட்டாக்கள் கிராம வட்டக்கணக்குகளில் மாறுதல்கள் செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இனி வரும் காலங்களில் நில அளவை ஆவணங்களுடன், புலப்படங்களும் கணிணிமயமாக்கப்பட்டு வருவதால் உட்பிரிவு மாறுதல் பணி தானாகவே கணக்குகளில் பதிவாகும் நிலை உள்ளது.

சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்படும் பத்திரங்கள் 12.02.2018 முதல் இணைய வழி அனுப்பப்பட்டு அந்த பத்திரங்களில் முழுப்புலங்கள் கிராம நிர்வாக அலுவலர்களுக்கும், உட்பிரிவுகள் குறுவட்ட அளவர்களுக்கு பட்டா மாறுதல் செய்யும் வண்ணம் மென்பொருள் தயார் செய்யப்பட்டு அந்த பட்டா மாறுதல் விண்ணப்பங்களும் இணைய வழிப்பட்டா மாறுதல்கள் போலவே பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

நில அளவை ஆவணங்களை கணிணிபடுத்துதல்

புலப்படங்கள் கணிணிமயமாக்கல்

சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காளையார்கோவில், இளையான்குடி, மானாமதுரை, திருப்புவனம், தேவகோட்டை, காரைக்குடி, திருப்பத்துhர் மற்றும் சிங்கம்புணரி ஆகிய 9 வட்டங்களும் 39 குறுவட்டங்களும் 521 வருவாய் கிராமங்களும் உள்ளது. மொத்தமுள்ள 9 வட்டங்களில் உள்ள 521 கிராமங்களில் புலப்படங்களை கணிணியில் வரைவு செய்யும் பணியில் மொத்தம் 521 கிராமங்களில் உள்ள மொத்த புலங்கள் 1,53,801ல் 1,47,556 புலப்படங்கள் கணிணியில் வரைவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 6245 புலப்படங்கள் வரைவு செய்யும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது.

மேலும், கணிணிப்படுத்தப்பட்டுள்ள 1,47,556 புலங்களில் வட்ட அலுவலகங்களில் இணைய வழிப்படுத்துவதற்காக 1,42.025 புலங்கள் அங்கீகாரம் செய்யப்பட்டு மீதமுள்ள புலப்படங்கள் வட்ட அலுவலகங்களில் புலப்படங்கள் அங்கீகாரம் செய்யும் பணிகள் முடிக்க துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புலப்படங்கள் கணிணிப்படுத்தல் பணிகள் முடிவுற்ற பிறகு பொதுமக்கள் இணையதளம் வாயிலாக பயன் பெற வழிவகை உள்ளது.

நத்தம் ஆவணங்கள் கணிணிமயமாக்கல்

சிவகங்கை மாவட்டத்தில் மொத்தமுள்ள 9 வட்டங்களில் 4,68,639 பதிவுகள் கணிணியில் பதிவு செய்யப்பட்டு சரிபார்க்கப்பட்டுள்ளது. இதனை வட்ட அலுவலகங்களில் கிராம நிர்வாக அலுவலர் ஆவணங்களுடன் ஒப்பிட்டு அதில் ஏற்பட்டுள்ள திருத்தங்களை கணிணியில் சரிபார்த்து திருத்தங்கள் மற்றும் விடுபட்ட பதிவுகளை மறுபதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று முடிவடையும் நிலையில் உள்ளது. இப்பணிகளை முடிவடைந்த பின் தமிழ்நிலம் பட்டா மாறுதல் போன்று இணையதளம் வாயிலாகவே பொதுமக்கள் பயன் பெறலாம்.

நகரளவை ஆவணங்கள் கணிணிமயமாக்கல்

சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, தேவகோட்டை மற்றும் காரைக்குடி ஆகிய 3 நகரங்கள் உள்ளது.

சிவகங்கை நகரத்தில் 5 வார்டுகளும், 66 பிளாக்குகளும் உள்ளன. இதில் நகர ஆவணங்கள் பதிவேற்றம் செய்து மூல ஆவணத்துடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டு திருத்தங்கள் மேற்கொள்ளும் பணி முடிவு பெற்று நகர ஆவணங்கள் இணையவழிப்படுத்த தயார் நிலையில் உள்ளது.

தேவகோட்டை நகரத்தில் 17 வார்டுகளும், 176 பிளாக்குகளும் உள்ளன. இதில் நகர ஆவணங்களை கணிணியில் பதிவேற்றம் செய்து மூல ஆவணங்களுடன் ஒப்பிட்டு திருத்தங்கள் மேற்கொள்ளும் பணி நடைபெற்று வருகிறது.

காரைக்குடி நகரத்தில் 17 வார்டுகளும், 237 பிளாக்குகளும் உள்ளது. இதில் நகர ஆவணங்களை கணிணியில் பதிவேற்றம் செய்து மூல ஆவணங்களுடன் ஒப்பிட்டு திருத்தங்கள் மேற்கொள்ளும் பணி நடைபெற்று வருகிறது.