மூடுக

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவிப்பு:
                 வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணி தொடர்பாக உங்களது BLO-க்கள் தற்போது வீடு வீடாக கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கி
                பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை திரும்ப பெற்று வருகிறார்கள். வாக்காளர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள
                கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2002
முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 18 வயது நிரம்பிய முதிர்வு தொகையைப் பெறப்படாத பயனாளிகளின் விவரப் பட்டியல்

சிவகங்கை மாவட்ட கலைக்கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், இன்ஜினியரிங் கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சிப் பள்ளிகளின் விபரங்கள்

மாவட்டம் பற்றி

சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டமாகும். சிவகங்கை மாவட்டம் அரசு ஆணை எண். 1122 – வருவாய் தேதி 06/07/1984 படி, இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு அரசு ஆணை எண். 346 வருவாய் தேதி 08/03/1985 படி 15/03/1985 முதல் செயல்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டம் மக்கள் தொகையில் 27 ஆவது மிகப்பெரிய மாவட்டமாக உள்ளது. மேலும் மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிலோமீட்ருக்கு 324 ஆக உள்ளது. 1000 ஆண்களுக்கு 1,003 பெண்கள் வசிக்கின்றனர். சிவகங்கை மாவட்டம் 9˚.43 ‘மற்றும் 10˚.22’ வடக்கு அட்சரேகை மற்றும் 77˚. 47 ‘மற்றும் 78˚.49’ கிழக்கு தீா்க்க ரேகையில் அமைந்துள்ளது. இதன் வடகிழக்கில் புதுக்கோட்டை மாவட்டம், வடகிழக்கில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், தென்கிழக்கில் இராமநாதபுரம் மாவட்டம், மேற்குத் திசையில் விருதுநகர் , மதுரை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் எல்லையாக அமைந்துள்ளன. மேலும் வாசிக்க

மாவட்ட விவரங்கள்

பொது:

மாவட்டம்: சிவகங்கை
தலைமையகம்: சிவகங்கை
மாநிலம்: தமிழ்நாடு
பரப்பளவு: 4189 ச.கி.மீ

மக்கள் தொகை:

மொத்தம்: 13,39,101
ஆண்கள்: 6,68,672
பெண்கள்: 6,70,429
நகர்ப்புற மக்கள்: 4,12,845
கிராமப்புற மக்கள்: 9,26,256
பாலின விகிதம்: 1003/1000