மூடுக

புகழ்பெற்ற பிரபலங்கள்

இராணி வேலு நாச்சியார் (03-01-1730 – 25-12-1796)

இராணி வேலு நாச்சியார்

இராணி வேலு நாச்சியார் இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை ஆவார்.இவர் 1730ஆம் ஆண்டு, இராமநாதபுரம் மன்னர் செல்ல முத்து விஜயரகுநாத சேதுபதி – சக்கந்தி முத்தாத்தாளுக்கு ஒரே பெண் மகளாக பிறந்தா . இவரை ஆண் வாரிசு போலவே வளர்க்கப்பட்டார். மேலும் இவர் பல மொழிகள் கற்றார் ஆயுதப் பயிற்சி பெற்றார்.

இராணி வேலு நாச்சியார் 1746 இல் சிவகங்கைச் சீமை மன்னர் முத்துவடுகநாதத்தேவருக்கு மனைவியானார். 1772 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25 ஆம் தேதி சிவகங்கைப் படைகளை பெஞ்சர் முற்றுகையிட்டார். ராஜா முத்து வடுகநாதர் மற்றும் அவரது பல வீரர்களுடன் அந்த வீர போரில் இறந்து விட்டார். வேலுநாச்சியார் முத்து வடுக நாதரை அடைக்கம் செய்து விட்டு விருப்பாச்சி விரைந்தார்.

தண்டவராயன் பிள்ளை உடன் கைம்பெண் ராணி வேலுநாச்சியார் மற்றும் மகள் வெள்ளச்சிநாச்சியார் திண்டுக்கல்லுக்கு விருப்பாச்சி பாளையம் சென்றனர்.பின்னர் ராணி வேலுநாச்சியாரின் பாதுகாவலர்கள் வெள்ளைமருது மற்றும் சின்னமருதுஆகியோர்இணைந்து கொண்டனர்.இராணி வேலு நாச்சியார் மற்றும் அவரது மகள் வெள்ளச்சி நாச்சியார் திண்டுக்கல் அருகே விருப்பாச்சிபாளையத்தில் கோயில நாயக்கர் பாதுகாப்பில் கீழ் வசித்து வந்தனர்.

இராணி வேலு நாச்சியார்

வேலுநாச்சியாரை எதிர்த்துப்போராடுவதால் விரக்தியடைந்த நவாப்வேலுநாச்சியார், அவரது மகள் வெள்ளச்சி நாச்சியார் மற்றும் மருதுசகோதரர்கள் சிவகங்கைக்குத்திரும்ப அனுமதிக்கப்பட்டனர் மற்றும் நவாபிற்கு கிஷ்தி செலுத்திவிட்டு நாட்டை ஆள்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். நிர்வாகத்திற்காக அனுமதிக்கப்பட்ட ஒரு உடன்படிக்கை படி ராணி வேலு நாச்சியார் சிவகங்கையை ஆட்சிபுரிவதற்கு சின்னமருதுவை நாட்டின் முதல்அமைச்சராக பணிபுரிவதற்கும் வெள்ளைமருது நாட்டின் தலைமைத்தளபதியாக பணிபுரிவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் கைம்பெண் ராணி வேலு நாச்சியார் தனது கணவனைத்தொடர்ந்து 1780 வரை சிவகங்கையை ஆட்சிபுரிந்தார். இவர் நாட்டை நிர்வகிப்பதற்காக மருதுசகோதரர்களுக்கு அதிகாரங்களை வழங்கினார். சில வருடங்களுக்குப்பிறகு ராணி வேலு நாச்சியார் இறந்தார், ஆனால் அவரது இறப்பு குறித்த சரியான தேதி தெரியவில்லை (அது சுமார் 1796ஆக இருக்கலாம்).

மருது சகோதரர்கள்

மருது சகோதரர்கள்

மருது சகோதரர்கள் உடையார் சேர்வை என்ற மூக்கையா பழனியப்பன் சேர்வை மற்றும் ஆனந்தாயி என்ற பொன்னாத்தாள் தம்பதிகளின் மகன்கள். அவர்கள் ராமநாதபுரத்தில் உள்ள கொங்காலு தெருவில் இருந்து வந்தவர்கள். அவர்கள் பண்டைய பாளையகாரர்கள் வழி வந்தவர்களோ அல்லது அச்சாதியில் பிறந்தவர்கள் அல்ல.

சேர்வைக்காரன் என்பது சாதிப்பெயராகும் மருது என்பது குடும்பபெயராகும் ஆகும். மருது சகோதரர்கள் முத்து வடு கநாததேவரின் கீழ் பணியாற்றினர். பின்னர் அவர்கள் தளபதி நிலைக்கு உயர்த்தப்பட்டனர். பூமாராங்க்(வளரி) என்பது இந்தியாவில் உள்ள விசித்திரமான ஆயுதம். இந்த ஆயுதங்களின் இரண்டு வடிவங்கள் இந்தியாவில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ஆயுதங்கள் பொதுவாக மரத்தினால் செய்யப்பட்டவை. இதன் மேல் பகுதி கனமானதாகவும், வெளிப்புற விளிம்பில் கூர்மையாகவும் இருக்கும். தமிழ்மொழியில் அவைகளின் பெயர் வளரிகுச்சி என்பதாகும்.

மருது சகோதரர்கள் வளரிகுச்சியை எறியும் கலையில் வல்லுநர்கள் என்று கூறப்படுகிறது. ஆங்கிலேயர்களுக்கு எதிரான பாளையப்போர்களில் மருது சகோதரர்கள் வளரி ஆயுதத்தைப்பயன்படுத்தினார் என்றுகூறப்படுகிறது. 12,000 ஆயுதம் தாங்கிய வீர்களுடன் மருது சகோதரர்கள் சிவகங்ககைச்சூழ்ந்தனர் மற்றும் நவாபின் பிரதேசங்களை சூறையாடினர். 1789 மார்ச் 10 ம் தேதி நவாப் சென்னை கவுன்சிலுக்கு உதவிக்காக முறையிட்டார். ஏப்ரல் 29, 1789 அன்று பிரிட்டிஷ் படைகள் கொல்லங்குடியில் மருது படைகளை தாக்கின. இங்கு நடைப்பெற்ற பெரியசண்டையில் பிரிட்டிஷ்படைகள் மருதுபடைகளினால் தோற்கடிக்கப்பட்டது.

மருது சகோதரர்கள்

பாஞ்சாலங்குறிச்சியின் மன்னன் வீரபாண்டியகட்டபொம்மனுடன் மருதுசகோதரர்கள் நெருங்கிய தொடர்பில் இருந்தனர். மருதுசகோதரர்களுடன் கட்டபொம்மன் அடிக்கடி ஆலோசனைகளை நடத்தினார். கயத்தாறில் 1799 அக்டோபர் 17 இல் கட்டபொம்மனுக்கு மரணதண்டனை நிறைவேற்றிய பின்பு சின்னமருது கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரைக்கு சிவகங்கையில் தஞ்சம் அளித்தார். அவர் இந்துக்கள், முஸ்லிம்கள் அனவரும் ஆங்கிலேயருக்கு எதிராகப்போராட தென்னிந்தியத் தீபகற்பத்திலுள்ள மக்களுக்கு ஒரு ஜம்பு தீபப்பிரகடனத்தை அறிவித்தார். கடைசியில், ஆங்கில மேலாதிக்கத்திலிருந்து தாய்நாட்டை விடுவிக்க போராடிய காரணத்திற்காக மருதுபாண்டியர்கள் கைது செய்யப்பட்டனர்.

1801 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24 ம் தேதி சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள கோட்டையின் சிதறல்கள் மீது போராளிகளான மருதுபாண்டியனுக்கும், அவரது சகோதரன் வெள்ளைமருதுக்கும் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. 1801