மூடுக

மாவட்டம் பற்றி

அரசு ஆணை

சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டமாகும். சிவகங்கை மாவட்டம் G.O. MS. No. 1122 – வருவாய் தேதி 06/07/1984 படி, ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு G.O Ms.No. 346 வருவாய் தேதி 08/03/1985 படி 15/03/1985 முதல்செயல்பட்டு வருகிறது.

இடம் மற்றும் எல்லைகள்

சிவகங்கை மாவட்டம் மக்கள் தொகையில் 26 ஆவது மிகப்பெரிய மாவட்டமாக உள்ளது. மேலும் மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிலோமீட்ருக்கு 324 ஆக உள்ளது. 1000 ஆண்களுக்கு 1,003 பெண்கள் வசிக்கின்றனர். சிவகங்கை மாவட்டம் 9˚.43 ‘மற்றும் 10˚.22’ வடக்கு அட்சரேகை மற்றும் 77˚, 47 ‘மற்றும் 78˚.49’ கிழக்கு தீா்க்க ரேகையில் அமைந்துள்ளது. இது 4189 சதுர கிலோமீட்டர் பரப்பளவை உள்ளடக்கியது. இதன் வடகிழக்கில் புதுக்கோட்டை மாவட்டம், வடகிழக்கில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், தென்கிழக்கில் ராமநாதபுரம் மாவட்டம், மேற்குத் திசையில் விருதுநகர் , மதுரை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் எல்லையாக அமைந்துள்ளது.

நிர்வாக அலகுகள்

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை மற்றும் தேவகோட்டை ஆகிய இரு வருவாய் கோட்டங்களையும், சிவகங்கை, மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம், காளையார்கோவில், தேவகோட்டை, காரைக்குடி, திருப்பத்தூா் மற்றும் சிங்கம்புணரி ஆகிய ஒன்பது வட்டங்களையும், 521 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கியுள்ளது. இம்மாவட்டம், சிவகங்கை, மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம், காளையார்கோவில், தேவகோட்டை, சாக்கோட்டை, கல்லல், எஸ்.புதூா், திருப்பத்தூா் மற்றும் சிங்கம்புணரி ஆகிய பன்னிரண்டு வட்டாரங்களையும், 445 கிராம ஊராட்சிகளையும் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி மற்றும் தேவகோட்டை ஆகிய மூன்று நகராட்சிகளும், மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம், திருப்பத்தூா், சிங்கம்புணரி, நெற்குப்பை, பள்ளத்தூா், கோட்டையூா், கானாடுகாத்தான், கண்டனூா், புதுவயல் மற்றும் நாட்டரசன்கோட்டை ஆகிய பன்னிரண்டு பேரூராட்சிகளும் உள்ளன..

அமைவியல்

சிவகங்கை மாவட்டத்தில் சிவப்பு மண் மற்றும் களிமண் உள்ளது. இம்மாவட்டத்தில் நிலப்பரப்பு பனை மற்றும் கருவேல மரங்களால் சூழப்பட்டுள்ளது. வைகை நதி மூலமாக கிட்டத்தட்ட 100 கண்மாய்கள் பாசன வசதி பெறுகிறது. பிரான்மலை மற்றும் குன்றக்குடியில் உள்ள சிறுகுன்று இந்த மாவட்டத்தில் உள்ள மலைகளாகும்..

காலநிலை மற்றும் வெப்ப நிலை

குறிப்பாக கோடை மாதங்களில், உலர்ந்த மற்றும் புழுக்கமான காலநிலையாக இருக்கும். குளிர்காலத்தின் போது (அதாவது) டிசம்பர் முதல் ஜனவரி வரையிலான வெப்பநிலை சாதாரணமாகக் குறைவாக இருக்கும். இந்த மாவட்டத்தில் ஆண்டு முழுவதும் சூரிய ஒளி மற்றும் மிதமான உயர் வெப்பநிலை காணப்படும். இங்கு 42˚-43˚C அதிகபட்ச வெப்பநிலை ஆகும். கோடைகாலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெப்பம் அதிகமாகவும் மற்றும் குளிர்காலமான டிசம்பர் – ஜனவரி மாதங்களில் வெப்பம் குறைவாகவும் இருக்கும்.

மழை பொழிவு

இம்மாவட்டம் சாதாரண ஆண்டு மழையாக 904.7 மிமீ பெறுகிறது.