மூடுக

வட்டார போக்குவரத்து அலுவலகம்

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சிவகங்கை மற்றும் காரைக்குடில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகங்களும், பொதுமக்களின் வசதிக்காக இயங்கி வருகின்றன.

கீழ்க்காணும் பணிகள் இவ்வலுவலகத்தில் மேற்கொள்ளப்படுகின்றன:

  • பழகுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம் மற்றும் நடத்துநர் உரிமம் போன்றவை வழங்குதல்.
  • இயங்கு ஊர்திகளின், பதிவு மற்றும் புதுப்பித்தல் சான்று வழங்குதல்.
  • தகுதிச் சான்று வழங்கல் மற்றும் தகுதிச் சான்று புதுப்பித்தல் போன்றவை.
  • தேசிய போக்குவரத்து ஊர்தி அனுமதி, போக்குவரத்து ஊர்தி அனுமதி , ஒப்பந்த ஊர்தி அனுமதி (சுற்றுலா ஊர்தி , வாடகை ஊர்தி, ஆட்டோ ரிக்ஷா , ஷேர் ஆட்டோ போன்றவை), கல்வி நிறுவன பேருந்துகள், தனியார் பணி வாகனங்கள், பேருந்து போன்றவைகளுக்கு அனுமதி வழங்குதல்.
  • சாலை பாதுகாப்பு மற்றும் இதர குற்றங்கள் தொடர்பாக அனைத்து வகை போக்குவரத்து வாகனங்களையும் ஆய்வு செய்தல் மற்றும் உரிய கட்டணங்களை வசூலித்தல்.
  • அபாயகரமாக விபத்து ஏற்படுத்திய வாகன ஓட்டுநர்கள் மற்றும் இதர வாகன ஓட்டுநர்களின் மீது நடவடிக்கை எடுத்தல்.
  • ஒவ்வொரு வருடமும், பொதுமக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்த, ஜனவரி மாதத்தில் சாலை பாதுகாப்பு வாரம் கொண்டாடுதல்.
  • மாசு பரிசோதனை மையம், அவசர விபத்து சிகிச்சை மையம் ஆகியவற்றை ஆய்வு செய்தல் போன்றவை.

சாலை பாதுகாப்பு :

  1. பழகுநர் உரிமம் பெறுவதற்காக வருகின்ற அனைத்து மனுதாரர்களுக்கும் சாலையில் பயன்படுத்தப்படும் குறியீடுகள் மற்றும் அதன் செயற்பாடுகள் குறித்து விபரமாக பயிற்சிகள் நடத்தப்படுகிறது. பிறகு கணினி மூலம் தேர்வு நடத்தப்படுகிறது, அதில் தேர்ச்சியடைந்த பின்னரே பழகுநர் உரிமம் வழங்கப்படுகிறது.
  2. சாலையில் பயன்படுத்தப்படும் அனைத்து வகையான குறியீடுகள் சம்மந்தமாக தேர்வு நடத்தி அதில் தேர்ச்சி பெற்ற பின்னரே ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்படுகின்றன.
  3. ஓவ்வொரு ஆண்டும் சனவரி 1ந் தேதி முதல் 7 வரை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழா போக்குவரத்து துறையினரால் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஒவ்வொரு நாளும் கீழ்க்கண்டவாறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
  4. ஓட்டுநர்களுக்கு இலவச கண் பரிசோதனை தேர்ந்த மருத்துவர்கள் மூலம் நடத்தப்படுகிறது.
  5. சாலை பாதுகாப்பு விளக்க மற்றும் விழிப்புணர்வு பேரணி துண்டு பிரசுரங்கள் விநியோகம் – அதிக வேகம், அதிக பாரம் சிறப்பு தணிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
  6. மாசுகட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைந்து அதிக ஒளி வீசும் முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்ட வாகனங்களை தணிக்கை செய்தல்
  7. பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன
  8. தேர்ந்தெடுக்கப்பட்ட கல்வி நிலையங்களில் போக்குவரத்து விதிகள் குறித்து அறிவிப்பு பலகைகள் பொறுத்தப்பட்டுள்ளன

சாலை விபத்துகளை தவிர்த்தல் :

2017 ஆம் ஆண்டில் குடி போதையில் வாகனம் இயக்கிய குற்றத்திற்காக, 456 ஓட்டுநர் உரிமங்களும், உயிரிழப்பு விபத்து ஏற்படுத்திய குற்றத்திற்காக 35 ஓட்டுநர் உரிமங்களும் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளன. அடிக்கடி விபத்துக்கள் நேரிடும் இடங்களை ஆய்வு செய்து விபத்துக்களை தவிர்க்கின்ற காரணங்களைக் கண்டறிந்து நெடுஞ்சாலைத் துறை மற்றும் காவல் துறையுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு அதற்கான முன்மொழிவுகள் இணைக்கப்பட்டுள்ளன. அடிக்கடி வாகன தணிக்கைகள் மேற்கொண்டு அதிக பாரம், அதிக வேகம், அதிக ஆட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை கைப்பற்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இத்தகைய செயல்களின் மூலம் விபத்துகள் நடப்பதை கட்டுப்படுத்தப்படுகின்றன. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களின் படி கல்வி நிறுவன வாகனங்களின் தாளாளர் மற்றும் ஓட்டுநர்களுக்கு அவ்வப்போது சிறப்புக் கூட்டம் நடத்தி தக்க அறிவுரைகள் வழங்கி அதன்படி செயல்படுகின்றனவா? என்பதை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தொடர்பு விபரம்:
பதவி தொடர்பு எண் மின்னஞ்சல் முகவரி முகவரி
வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்,
சிவகங்கை
04575 – 240243 rtotn63[at]nic[dot]in வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் வளாகம் அருகில்,
சிவகங்கை மாவட்டம்
மோட்டார் வாகன ஆய்வாளர்
காரைக்குடி
04565 – 227879 rtotn63z[at]nic[dot]in மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம்,
காரைக்குடி,
சிவகங்கை மாவட்டம்