கல்வி
முன்னுரை
கல்வி என்பது ஒரு சமுதாயம் பெற்ற தலைசிறந்த அறிவு மற்றும் அதன் திறன்களை ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு எடுத்து செல்லும் கருவி எனலாம். கல்வி ஒரு குழந்தையின் படைப்புத் திறனை மேம்படுத்துவதற்கான வழிகள் மற்றும் வாய்ப்புகளை வழங்கும் தன்மையுடையது. கல்வி மனிதர்களுக்கு உலகம் பற்றிய அறிவை கொடுக்கிறது. கல்வியறிவு ஒருவருக்கு சரியான கண்ணோட்டத்தில் தகவல்களைப் புரிந்துகொள்ளும் திறனை அளிக்கிறது.
நோக்கங்கள்:
- உலகளாவிய அணுகல், சமபங்கு, தரம் முதன்மையான, மேல் முதன்மை, இரண்டாம்நிலை மற்றும் உயர்நிலை நிலைகளில் வழங்குதல்
- அரசியலமைப்பிற்குட்பட்டு பாடத்திட்டத்தையும் மதிப்பீடு நடைமுறைகளையும் மேம்படுத்துதல்.
- குழந்தையின் அறிவு, திறமை மற்றும் குழந்தையின் உடல் மற்றும் மன திறன்களை முழுவதுமாக வளர்ப்பது.
- கண்டுபிடிப்பு மற்றும் ஆய்வுகள் முறைகள் மூலம் குழந்தைக்கு இணக்கமான முறையில் கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
- குழந்தைகளுக்கு ஆண்டுத் தேர்வுகளால் ஏற்படுகின்ற பதட்டம் மற்றும் மன அழுத்தத்தை அகற்றுவதற்காக, தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு முறையினை நடைமுறைப்படுத்துவதன் மூலம், வகுப்பறை வாழ்க்கையில் தேர்வுகள் மிகவும் நெகிழ்வானதாகவும் ஒருங்கிணைக்கப்பட்டதாகவும் ஆக்குதல்.
திட்டங்கள்:
அனைவருக்கும் கல்வி இயக்கம்:
அனைவருக்கும் கல்வி இயக்கம் (சர்வ சிக்ஷா அபியான்) [SSA] என்பது அடிப்படை கல்வி அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் மாநில அரசு மத்திய அரசுடன் கூட்டு சேர்ந்து செயல்படுத்தும் ஒரு திட்டமாகும்.
- 6 முதல் 14 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வி வழங்குவதன் மூலம் பாலின வகை மற்றும் சமூக வகை இடைவெளிகளை அகற்றி சமுதாயத்தினை மேம்பாடு அடையச் செய்தல்.
- 100 விழுக்காடு மாணவர் சேர்க்கையினை உறுதிப்படுத்துதல்.
- பள்ளிகளில் சேர்க்கப்பட்ட குழந்தைகளை பள்ளியிலிருந்து வெளியேறாமல் தக்க வைத்தல்.
- அனைத்து பள்ளிகளிலும் தரமான அடிப்படை கல்வியினை வழங்குதல்.
- நலிந்த பிரிவினரின் குழந்தைகளுக்கும், மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கும் பள்ளிகளில் உள்ளடங்கிய கல்வியினை வழங்குதல்.
- அனைத்துப் பள்ளிகளுக்கும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் தரமான கல்வியினை வழங்குதல்.
அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம்:
அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் (இராஷ்டிரிய மத்யமிக் சிக்ஷ்ய அபியான்) [RMSA] என்பது அனைத்துத் தரப்பு குழந்தைகளுக்கும் இடைநிலைக் கல்வியினை அளிப்பதன் மூலம் தேசத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பட்டினை எட்ட முடியும் என்ற நோக்கிலும், 5 கி.மீ.சுற்றளவிற்குள் ஒரு உயர்நிலைப் பள்ளியை அமைப்பதன் மூலம் இடைநிலை வகுப்புகளில் 90 விழுக்காட்டிற்கும் அதிகமான மாணவர் சேர்க்கையையும், மேல்நிலைக் கல்வியில் 75 விழுக்காட்டிற்கும் அதிகமான மாணவர் சேர்க்கையினையும் உறுதிப்படுத்த முடியும் என்ற நோக்கிலும் 2009-ஆம் ஆண்டு முதல் மாநில அரசு மத்திய அரசுடன் கூட்டு சேர்ந்து செயல்படுத்தும் ஒரு திட்டமாகும்.
இத்திட்டத்தின் மூலம் இடைநிலைக் கல்வியை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அளிப்பதன் மூலம் மூலம் பாலின வகை மற்றும் சமூக வகை இடைவெளிகளை அகற்றி சமுதாயத்தினை மேம்பாடு அடையச் செய்யவதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.
குறிக்கோள்கள்:
- 14-18 வயதிற்கு உட்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் நல்ல தரமான கல்வி கிடைத்தல்.
- ஒவ்வொரு குடியிருப்புக்கும் ஒரு நியாயமான தூரத்தில் அதாவது 5 கிலோ மீட்டல் சுற்றளவிற்குள் உயர்நிலைப் பள்ளி ஒன்றை அமைத்து ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பில் மாணவர் சேர்க்கையினை மேம்படுத்துதல் மற்றும் 7 முதல் 10 கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் மேல்நிலைப் பள்ளிகளை அமைப்பதன் மூலம் மேல்நிலை வகுப்புகளில் மாணவர் சேர்க்கையின் மேம்படுத்துதல்.
- அனைத்து உயர்நிலைப் பள்ளிகளிலும் பரிந்துரைக்கப்பட்ட / நிலையான நெறிமுறைகளின்படி கல்வி தரத்தை மேம்படுத்துதல்.
- இடைநிலைக் கல்வி பெறுவதற்கு சமூக, பொருளாதார மற்றும் பாலின தடைகளை அகற்றதல்.
- 2020 ஆம் ஆண்டிற்குள் 14-18 வயதிற்குட்பட்டவர்கள் 100 விழுக்காடு இடைநிலைக் கல்வியினை பெறுதல்.
- ஒவ்வொரு உயர்நிலை பள்ளிகளுக்கும் கற்பித்தல் பணிக்குத் தேவையான ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்களை பணியமர்த்துதல்.
- அனைத்து மாணவர்களும் நல்ல தரமன இடைநிலைக் கல்வியை தொடர வைத்தல்.
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்.
சிவகங்கை மாவட்டத்தில் 133 சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளின் நுழை நிலை வகுப்பில் 6840 இடங்கள் உள்ளன. குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் – 2009 பிரிவு 12(1) (C) இன்படி வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளின் நுழைநிலை வகுப்புகளில் 6840 இடங்களில் 25 விழுக்காடான 1759 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
பள்ளியின் வகை | சிவகங்கை பிரிவு | தேவக்கோட்டை பிரிவு | மொத்தம் எண்ணிக்கைக்கள் |
---|---|---|---|
அரசு உயர்நிலை பள்ளி | 33 | 32 | 65 |
அரசு மேல்நிலைப்பள்ளி | 30 | 32 | 62 |
நகராட்சி உயர்நிலை பள்ளி | 0 | 3 | 3 |
புனர்வாழ்வு மேல்நிலைப்பள்ளி | 0 | 1 | 1 |
சமூக நல பள்ளி | 1 | 0 | 1 |
அரசு உதவிபெறும் உயர்நிலை பள்ளி | 9 | 15 | 24 |
அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி | 14 | 21 | 35 |
சுய நிதி உயர்நிலை பள்ளி | 8 | 0 | 8 |
சுய நிதி மேல்நிலைப்பள்ளி | 3 | 0 | 3 |
ஆதிதிராவிடர் உயர்நிலை பள்ளி | 0 | 2 | 2 |
ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி | 1 | 0 | 1 |
அரசு மாதிரி பள்ளி | 0 | 1 | 1 |
மொத்தம் | 99 | 107 | 206 |