மூடுக

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை

சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஆதிதிராவிடா் / பழங்குடியினா் மற்றும் கிருத்துவ ஆதிதிராவிடா் இன மக்களின் கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்காக மாவட்ட அளவில் அனைத்து துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களை மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு நலத்திட்டங்களும் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகம் மூலமாக செயல்படுத்தப்பட்ட வருகிறது.

சமூக அளவிலும் பொருளாதார அளவிலும் பின்தங்கிய ஆதிதிராவிடா் / பழங்குடியினா் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடா் இன மக்களின் கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு வகைகளில் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை திட்டங்களும் ஆதிதிராவிடா் நலவிடுதிகள் மற்றும் உண்டி உறைவிட பள்ளிகள் முக்கிய பங்கு வகிக்கிறது. சமூக மேம்பாட்டுத் திட்டங்களில் வீட்டுமனை பட்டா வழங்குதல் வீடுகள் கட்டித் தருதல் அடிப்படை வசதிகளான குடிநீா், தெருவிளக்கு வசதி செய்தல், சாலைகள் அமைத்தல், மயானம் மற்றும் மயான பாதை அமைத்தல் போன்ற திட்டங்களும், பொருளாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் தையல் இயந்திரங்கள் மற்றும் சலவைப் பெட்டிகள் ஆகியவை வழங்குதல் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகம் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திட்டங்கள்

 1. இலவச உணவு மற்றும் உறைவிடம்
 2. பாய் மற்றும் போர்வை
 3. சிறப்பு உணவு கட்டணம்
 4. தனியார் மானிய விடுதிகள்
 5. 6 ஆம் வகுப்பில் மாணவ மாணவியரை சேர்த்தல்
 6. 11-ஆம் வகுப்பில் மாணவ மாணவியரை சேர்த்தல்
 7. பாடப்புத்தகங்கள் மற்றும் குறிப்பேடுகள்
 8. உயர்கல்வி சிறப்பு உதவித்தொகை
 9. சிறப்பு வழிகாட்டி மற்றும் வினா வங்கி
 10. இலவச வீட்டுமனை பட்டா
 11. குடியிருப்புகளில் குடிநீர் வசதி
 12. 10-ம் மற்றும் 12 வது வகுப்பு மாணவர்களுக்கான தேசிய கல்வி உதவி தொகை

ஆதிதிராவிடா் நல மாணவ / மாணவியா் பள்ளிகள்

வ.எண் பள்ளிகள் இருப்பிடம்
1 அரசு ஆதிதிராவிடா் நல துவக்கப்பள்ளி அதிகரம்
2 அரசு ஆதிதிராவிடா் நல துவக்கப்பள்ளி உஞ்சனை
3 அரசு ஆதிதிராவிடா் நல துவக்கப்பள்ளி மல்லல்
4 அரசு ஆதிதிராவிடா் நல உயா்நிலைப்பள்ளி அதிகரம்
5 அரசு ஆதிதிராவிடா் நல உயா்நிலைப்பள்ளி உஞ்சனை
6 அரசு ஆதிதிராவிடா் நல மேல்நிலைப்பள்ளி மல்லல்

ஆதிதிராவிடர் நல விடுதிகள் விபரம்

ஆதிதிராவிடர் நல விடுதிகள் விபரம் (PDF 712 KB)