• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடுக

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம்

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு செயலாளரின் தலைமையில் இயங்கி வருகிறது. மாநில அளவில் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையர் பிற்படுத்தப்பட்டோர் நலத்திட்டங்களையும், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்குநர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்திட்டங்களையும், அதே போன்று சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநரால் சிறுபான்மையினர்களுக்கான நலத்திட்டங்கள் செயல்படுத்தி வருகின்றனர்.

மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் நேரடி நிர்வாகத்தின்கீழ் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரால் கீழ்கண்ட நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

திட்டங்கள் :

  1. விலையில்லா சலவை பெட்டி வழங்கும் திட்டம்
  2. கல்வி உதவித்தொகை வழங்குதல்.
  3. ஊரக பெண்கல்வி ஊக்குவிப்புத் திட்டம்.
  4. விடுதிகள்
  5. விருதுகள் (ம) பரிசுகள்
  6. தலைசிறந்த தனியார் பள்ளிகளில் மேல்நிiல் கல்வி அளிக்கும் திட்டம்
  7. விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம்
  8. விலையில்லா தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல விடுதிகள் விபரம்

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல விடுதிகள் விபரம்(PDF 600 KB)