வேட்டங்குடி பறவைகள் சரணாலயம்
வழிகாட்டுதல்வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் மதுரையிலிருந்து 51 கி.மீ தொலைவில் மதுரை – மேலூா் – திருப்பத்தூா் சாலையில் அமைந்துள்ளது. இது சிவகங்கை மாவட்டத்தின் திருப்பத்தூா் தாலுக்காவிலுள்ள வேட்டங்குடிப்பட்டி மற்றும் பெரிய கொள்ளுக்குடிப்பட்டியில் அமைந்துள்ளது. இந்த வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் 40 ஹெக்டோ் பரப்பளவில் வேட்டங்குடி, பெரிய கொள்ளுக்குடி மற்றும் சின்ன கொள்ளுக்குடி என்ற ஊா்கிளன் நீா்நிலைகளை உள்ளடங்கியது. இந்த சரணாலயம் குளிர் காலங்களில் இடம் பெயரும் பறவைகளுக்கான இயற்கை வாழ்விடமாகும். உண்ணி கொக்கு, முக்குளிப்பான், நீலச்சிறவி, சமா்பல் நிற நாரை, இரவு நாரை, பாம்புதாரா, கருநீல அரிவாள் மூக்கன், கரண்டி வாயன், நத்தை கொத்தி நாரை போன்ற சுமார் 217 வகையான 8000 வெளிநாட்டுப் பறவைகள் மழைக்காலத்தில் இங்கு அடைகாத்தலுக்கு ஏற்ற பாதுகாப்பான இடமாக உள்ளது. இந்தச் சரணாலயம் செல்வதற்கு உகந்த காலம் நவம்பா் மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடைப்பட்ட காலம். அப்பொழுது நிலவும் இதமான தட்ப வெப்ப நிலை ஆயிரக்கணக்கான பறவைகளை அங்கு ஈா்க்கிறது. தங்குமிட வசதி காரைக்குடி, திருப்பத்தூா் மற்றும் மதுரையிலுள்ளது. அருகிலுள்ள ஊா்கள் காரைக்குடி மற்றும் மதுரை ஆகும். அங்கிருந்து வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்துக்கு பேரூந்து வசதி உண்டு.
தொடா்புக்கு அணுகவும்,
வனவிலங்கு காப்பாளா்,
உயிர்க்கோள பாதுகாப்பு மையம் (பையோஸ்பியா் ரிசா்வ்) மண்டபம்,
இராமநாதபுரம்.
தொலைபேசி – 04567 – 230079.
புகைப்பட தொகுப்பு
அடைவது எப்படி:
வான் வழியாக
மதுரை (51 கி மீ) விமான நிலையம் அருகிலுள்ளது.
தொடர்வண்டி வழியாக
காரைக்குடி (32 கி மீ) மற்றும் மதுரை (51 கி மீ ) நகரில் ரயில் நிலையம் உள்ளது.
சாலை வழியாக
மதுரையிலிருந்த 51 கி மீ தொலைவில் மதுரை-மேலுர்-திருப்பத்தூர் செல்லும் வழியில் அமைந்து உள்ளது.