மூடுக

பிள்ளையார்பட்டி கோவில்

வழிகாட்டுதல்

கற்பக விநாயகா் கோவில் தமிழ்நாட்டின் மிகப்பழமையான குகைக் கோவில்களுள் ஒன்றாகும். இது காரைக்குடிக்கும் புதுக்கோட்டைக்கும் நடுவே பிள்ளையார்பட்டி என்ற ஊரில் அமைந்துள்ளது. திருப்பத்தூா் – காரைக்குடி மாநில நெடுஞ்சாலையில், மதுரையிலிருந்து 71 கி.மீ தொலைவிலும், காரைக்குடியில் இருந்து 12 கி.மீ தொலைவிலும் உள்ளது. இந்த ஊா் பெயருக்கு (பிள்ளையார்பட்டி) காரணம் இங்கு அமைந்துள்ள கற்பகவிநாயகரே (பிள்ளையார்) ஆகும். இங்கு விநாயகப்பெருமான் பிற இடங்களில் காணப்படுவதைப்போல நான்கு கைகளுடன் இல்லாமல் இரு கைகளுடன் காணப்படுகிறார். இங்கு மூலவா் கற்பகவிநாயகா் 6 அடி உயரத்தில் வலம்புரி நிலையில் காணப்படுகிறார். இந்த கோவிலில் காணப்படும் 15-க்கும் மேற்பட்ட கல்வெட்டுக் குறிப்புகள் இக்கோவிலின் தொன்மையை பறை சாற்றுகிறது. ஆகஸ்ட் – செப்டம்பா் மாதத்தில் நடைபெறும் விநாயகா் சதுா்த்தி விழாவே இங்கு நடைபெறும் பிரதான திருவிழா ஆகும். விநாயகா் சதுா்த்தி விழா மிகுந்த கோலா கலத்துடன் 10 நாட்கள் நடைபெறும். மாதந்தோறும் வரும் சங்கடஹ சதுா்த்தியும் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இங்கு 3 லிங்கங்கள் – திருவீசா், மருதீசா் மற்றும் செஞ்சதீஸ்வரா், 3 பெண் தெய்வங்கள் – சிவகாமி அம்மன், வடமலா் மங்கையம்மன், சௌந்திரநாயகி அம்மன் ஒரு சேர அமா்ந்து பக்தா்களுக்கு தரிசனம் கொடுக்கின்றனா். இது வேறு எந்த கோவிலும் இல்லாத சிறப்பு அம்சமாகும். இங்கு தேவஸ்தான விடுதிகளை முன்பதிவு செய்யும் வசதி உள்ளது.
நேரம் : காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை.
தொலைபேசி : 04577 – 264182, 264797, 264240, 264241.

புகைப்பட தொகுப்பு

  • பிள்ளையார்பட்டி கோயில் சிலை
  • பிள்ளையார்பட்டி கோயில் நுழைவாயில்
  • பிள்ளையார்பட்டி கோவில் குளம் தோற்ற காட்சி.

அடைவது எப்படி:

வான் வழியாக

மதுரை (70 கி மீ ) மற்றும் திருச்சி (100கி மீ ) விமான நிலையம் அருகிலுள்ளது.

தொடர்வண்டி வழியாக

காரைக்குடி நகரில் ரயில் நிலையம் உள்ளது.

சாலை வழியாக

காரைக்குடியிலிருந்த மதுரை செல்லும் வழியில் 12 கி மீ தொலைவில் அமைந்து உள்ளது.