முன்னுரை:
தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்தின் குறிக்கோள், எல்லா குடிமக்களுக்கும் குறிப்பாக ஏழை மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல் ஆகும். பொது விநியோக திட்டம் அத்தியாவசியமான பொருட்களை மலிவான விலையில் ஒவ்வொரு மாதமும் நியாய விலைக் கடைகள் மூலம் அனைத்து மக்களுக்கு வழங்குகிறது. மேலும் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமை வட்ட வாரியாக குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது. குடும்ப உறுப்பினர் நீக்கம், பெயர் சேர்த்தல், குடும்பத் தலைவர் மாற்றம், தொலைபேசி எண்கள் மாற்றம், புதிய குடும்ப அட்டைகள் வழங்குதல் போன்ற பணிகள் நடைபெறுகிறது.