மூடுக

தாட்கோ

நிலம் வாங்கும் திட்டம்

ஆதிதிராவிட மக்களின் நில உடைமையை அதிகரிக்கும் பொருட்டு, இத்திட்டம் கீழ்க்கண்ட தகுதி/ நிபந்தனைகளுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது

தகுதி

ஆதிதிராவிட இனத்தை சேர்ந்த மகளிர்க்கு முன்னுரிமை அளிக்கப்படும் மகளிர் இல்லாத குடும்பங்களில் கணவர் அல்லது மகன்களுக்கு வழங்கப்படும்.

வயது 18- 65 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும்

விண்ணப்பதாரர் விவசாயத்தைத் தொழிலாகக் கொண்டவராக இருக்க வேண்டும் விவசாயக் கூலி வேலை செய்பவராகவும் இருக்கலாம்

விண்ணப்பதாரர் மற்றும் அவர் குடும்பத்தினர் தாட்கோ திட்டத்தின் கீழ் இதுவரை மானியம் எதுவும் பெற்றிருக்க கூடாது

வாங்க உத்தேசித்துள்ள நிலத்தை விண்ணப்பதாரே தெரிவு செய்ய வேண்டும்

நிலம் விற்பனை செய்பவர் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் அல்லாத பிற இனைத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்

நிலமற்றவர்கள் அதிகபட்சமாக 2.5ஏக்கர் நஞ்சை அல்லது 5ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம்,
நிலங்களுக்கு 100% முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது

நிலத்தினை 20 வருடங்களுக்கு விற்பனை செய்யதவாறு வில்லங்கம் ஏற்படுத்த வேண்டும்

நில மேம்பாட்டு திட்டம்

நிலவளத்தை மேம்படுத்தல் ஆழ்குழாய் கிணறு / திறந்த வெளி கிணறு, பம்ப் செட் அமைத்தல், குழாய் அமைத்தல், சொட்டு நீர் பாசனம் மற்றும் சுழல்முறை நீர்ப்பாசனம் அமைத்தல் போன்றவற்றிற்காக மானியம் வழங்கி இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

துரித மின் இணைப்பு திட்டம்

முன்னுரிமை அடிப்படையில் தகுதியுடைய விண்ணப்பதாரர் ஒருவருக்கு ரூ, 75,000/- வைப்புத் தொகையாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான ழகத்திடம் நேரடியாக தாட்கோ செலுத்தி ஆதிதிராவிட விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பு பெற்றுத் தந்திட இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தகுதி

விண்ணப்பதாரர் விவசாயியாக இருக்க வேண்டும்

வயது 18-65 குள்ளாக இருக்க வேண்டும்

நிலம் விண்ணப்பதாரருக்கு சொந்தமாக இருப்பதுடன் அவரது பெயரில் நிலப்பட்டா இருக்க வேண்டும்

மேற்கண்ட நிலத்தில் கிணறு அல்லது ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டிருக்க வேண்டும்

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் மின் இணைப்பு கோரி விண்ணப்பித்திருக்க வேண்டும்

தொழில் முனைவோர் திட்டம் (சிறப்பு திட்டம்) பெட்ரோல்,டீசல் எரிவாயு சில்லறை விற்பனை நிலையம் அமைத்தல்

எண்ணெய் நிறுவனத்தால் அவ்வப்போது நிர்ணயம் செய்யப்படும் வயது வரம்பினை பெற்றிருக்க வேண்டும்

விண்ணப்பதாரர் எண்ணெய் நிறுவனத்தால் அவ்வப்போது நிர்ணயம் செய்யப்படும் கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். தொழில் சார்ந்த கல்வி பயின்றவர்க்கு முன்னுரிமை வழங்கப்படும்

விண்ணப்பதாரர் பெட்ரோல் டீசல் சில்லறை விற்பனை நிலைய முகவர்களின் நியமனத்திற்கு உரிய தகுதியை பெற்றிருக்க வேண்டும்

தொழில் முனைவோர் திட்டம்

இத்திட்டத்தின்கீழ் ஆதிதிராவிடர்கள் தங்களுக்கு தெரிந்த, முன் அனுபவம் உள்ள தொழிலுக்கு மானியக் கடனுதவி வழங்கப்படுகிறது. தொழில் முனைவோர் பொருளாதார மேம்பாட்டு திட்டத்திற்கு ஆண்டு வருமானம் உச்சவரம்பு 1.00 இலட்சம். வயது வரம்பு 18 முதல் 65 வரை இருக்க வேண்டும். கடன்கோரும் தொழிலுக்கு முன் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் தாட்கோ திட்டத்தின்கீழ் இதுவரை மானியம் எதுவும் பெற்றிருக்க கூடாது. கால்நடை வளர்ப்பு / பால்பண்ணை தொழிலுக்கு ஆவின் போன்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும்.

இளைஞர்களுக்கான சுய வேலை வாய்ப்பு திட்டம்

இத்திட்டத்தின் கீழ் 18 முதல் 45 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் முன் அனுபவம் உள்ள தொழிலை மேற்கொள்ளும் வகையில் இத்திட்டம் செயல்படுகிறது குடும்ப ஆண்டு வருமானம் உச்சவரம்பு 1.00 இலட்சம். திட்ட தொகையில் மானியம் 30 சதவிகிதம் ரூ, 2,25 இலட்சம் வரையில் மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயனாளிகளின் எண்ணிக்கையில் 25% தாட்கோ மூலம் பயிற்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்

மருத்துவமனை மருந்துக்கடை, கண்கண்ணாடியகம், முடநீக்குமையம், இரத்த பரிசோதனை நிலையம் அமைத்தல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது

மகளிர் சுய உதவி குழுக்களுக்கான பொருளாதார கடனுதவி திட்டம்

சுயஉதவி குழுக்களுக்கு வறுமை ஒழிப்பு நோக்கோடு உள்கடன் அளித்திட சுழல் நிதி வழங்கப்படுகிறது, இத்திட்டம் வங்கிக் கடன் உதவியுடன் செயல்படுத்தக்கூடிய திட்டமாகும் . குழு உறுப்பினர்கள் 18-65 வயது உடையவராக இருக்கலாம் குழு ஊக்குநரின் குடும்ப ஆண்டு வருமானமும் உறுப்பினர்களின் குடும்ப ஆண்டு வருமானமும் ரூ. 2.00 இலட்சம் வரை இருக்கலாம்.

மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கான பொருளாதார கடனுதவி திட்டம்

குழு திறன் பெற்றுள்ள தொழில்கள் அனைத்திலும் முதலீடு செய்வதற்கு மானியம் வழங்கப்படும் . குழு உறுப்பினர்கள் 18-65 வயதுள்ளவர்களாக இருக்கலாம் குழு உறுப்பினர்களின் ஆண்டு வருமானம் ரூ. 2.00 இலட்சம் வரை இருக்கலாம் இதுவரை எந்த ஒரு ஒரு அரசு மானியமும் பெறாத குழுவாக இருத்தல் வேண்டும் , சுழல்நிதி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்

மாவட்ட ஆட்சியர் விருப்புரிமை நிதி

மாவட்ட ஆட்சியர் விருப்புரிமை நிதி திட்டத்தின் கீழ் ஆதரவற்ற விதவைகள், மாற்றுத் திறனாளிகள் 30 வயதிற்கு மேற்பட்ட திருமணம் ஆகாத முதிர்கன்னிகள் மற்றும் பெற்றோர் / பாதுகாவலர் இல்லாத குழந்தைகள், குணப்படுத்த இயலாத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்

விண்ணப்பதாரர் ஆதிதிராவிட இனத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும், விண்ணப்பதாரர் தான் வறிய நிலையிலுள்ளார் என்பதற்கான உறுதி வாக்கு மூலம் வழங்க வேண்டும். மாவட்ட ஆட்சியரிடம் இத்திட்டத்தில் பயன்பெற நேரடியாக விண்ணப்பிக்கலாம்

இத்திட்டத்திற்கான பயனாளிகள் மாவட்ட ஆட்சியர் அவர்களால் தெரிவு செய்யப்படுவார்கள் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரருக்கு மானியம் விடுவிக்கப்படும்

மேலாண்மை இயக்குநர் விருப்புரிமை நிதி திட்டம்

ஆதிதிராவிட விதவைகள், மாற்றுத் திறனாளிகள், பெற்றோர் / பாதுகாவலர்கள் இல்லாத குழந்தைகள்/ திருநங்கைகள், நலிந்த கலைஞர்கள் குணப்படுத்த இயலாத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படுவதுடன்

விண்ணப்பதாரர் தான் வறிய நிலையிலுள்ளார் என்பதற்கான உறுதி வாக்கு மூலம் வழங்க வேண்டும்

தாட்கோ, தலைவரின் விருப்புரிமை நிதி திட்டம்

ஆதிதிராவிட விதவைகள், மாற்றும் திறனாளிகள் 30 வயதிற்கு மேற்பட்ட திருமணம் ஆகாத முதிர்கன்னிகள் மற்றும் பெற்றோர் / பாதுகாவலர் இல்லாத குழந்தைகள், குணப்படுத்த இயலாத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்

விண்ணப்பதாரர் ஆதிதிராவிட இனத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்,

இந்திய குடிமைப் பணி முதன்மை தேர்வு எழுதுவோருக்கு நிதியுதவி

ஆதிதிராவிட இனத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்

இந்திய குடிமைப் பணி முதனிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

இந்திய குடிமைப் பணி முதன்மை தேர்வு எழுதுவதற்காக விண்ணப்பம் செய்திருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் மாநில, மத்திய அரசு பொது துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் தற்காலிக அல்லது நிரந்தர பணியில் இல்லதவராக இருக்க வேண்டும்

ஆண்டு வருமானம் ரூ. 3.00இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்
இந்நிதியுதவி ஒருவருக்கு அதிகபட்சமாக மூன்று முறை வழங்கப்படும்

சட்டப்பட்டதாரிகளுக்கு தொழில் துவங்குவதற்கு நிதியுதவி

ஆதிதிராவிடர் இனத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்

வயது வரம்பு 21-45க்கு மிகாமல் இருக்க வேண்டும்

தேசத்தில் எந்த மாநிலத்திலும் உள்ள சட்டக்கல்லுரியில் படித்து சட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

மூன்று அல்லது ஐந்து வருட கால பட்ட படிப்பினை படித்திருக்க வேண்டும்

மத்திய மாநில பார் கவுன்சிலில் உறுப்பினராக இருக்க வேண்டும்

இந்நிதியுதவி ஒரு முறை மட்டுமே வழங்கப்படும்

தமிழ்நாடு தேர்வாணைய குரூப் -1 முதன்மை தேர்வு எழுதுவோருக்கு நிதியுதவி

தமிழ்நாடு தேர்வாணைய தொகுதி – 1 முதனிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்

ஆதிதிராவி இனத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்

தமிழ்நாடு தேர்வாணையம் தொகுதி -1 முதன்மைத் தேர்வு எழுவதற்காக விண்ணப்பம் செய்திருக்க வேண்டும்

விண்ணப்பதாரர் மாநில, மத்திய அரசு பொது துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் தற்காலிக அல்லது நிரந்தர பணியில் இல்லதவராக இருக்க வேண்டும்.

ஆண்டு வருமானம் ரூ. 3.00 இலட்சத்திற்குள் மிகாமல் இருக்க வேண்டும், இந்நிதியுதவி ஒருவருக்கு அதிகபட்சம் மூன்று முறை மட்டுமே வழங்கப்படும்.

பட்டயக்கணக்கர் / செலவு கணக்கர் / நிறுவன செயலருக்கு நிதியுதவி

ஆதிதிராவிடர் இனத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்

வயது வரம்பு 25–45க்கு மிகாமல் இருக்க வேண்டும்

பட்டயக் கணக்கர் / செலவு கணக்கர் / நிறுவன செயலராக தொழில் செய்வதற்கு இந்திய பட்டயக் கணக்கர் நிறுவனச் செலவு கணக்கர் நிறுவனத்தில் உறுப்பினராக பதிவு செய்திருக்க வேண்டும்

சமூக நலத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் மகளிர் தொழில் தையல் கூட்டுறவுச்சங்க உறுப்பினருக்கு சிறப்பு நிதியுதவி

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அளிக்கப்படும் விலையில்லா சீருடைகளை தைப்பதற்கு சமூக நலத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் மகளிர் தொழில் தையல் கூட்டுறவுச் சங்கங்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. மகளிர் தொழில் தையல் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள ஆதிதிராவிடர் மற்றும் அருந்ததியின மகளிர் பயன்பெறும் வகையில் தையல் இயந்திரங்கள் வாங்கிட திட்டத் தொகையில் 70 விழுக்காடும் தாட்கோ மூலதனத்தில் இருந்து விளிம்பு கடனாக 4 விழுக்காடு வட்டியில் 36 மாதங்களில் திருப்பி செலுத்த வேண்டிய தொகையும் மீதமுள்ள 30 விழுக்காடு தாட்கோ மூலம் மானியமாக வழங்கப்படும்.

தாட்கோ இணையதளம் (http://www.tahdco.tn.gov.in/) மூலம் விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முக தேர்வு நடத்தப்டுவதற்கு முன்பாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் மூலம் ஒரு நாள் விழிப்புணர்வு தொழில் முனைவோர் பயிற்சியும் தாட்கோ மூலம் மான்யம் விடுவிக்கப்படும் பயனாளிகளுக்கு 6 நாள் பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது.

மாவட்ட மேலாளர்,
தாட்கோ, சிவகங்கை,
தொலைபேசி எண் : 04575-240501