மூடுக

வரலாறு

சிவகங்கை மாவட்ட வரலாறு

சிவகங்கை அரண்மனை

இராமநாதபுரம் இராஜ்ஜியம் முதலில் இன்றைய இராமநாதபுரம், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்ட பிரதேசங்களை உள்ளடக்கியது. 1674 மற்றும் 1710 ஆம் ஆண்டுகளுக்கிடையில் ரெகுநாத சேதுபதி என்ற கிழவன்சேதுபதி என்பவர் 7வது மன்னராக ஆட்சி செய்தார் கிழவன்சேதுபதி சிவகங்கை அருகே சோழபுரம் நகரிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாலு கோட்டையின் பெரியஉடையத்தேவரின் துணிச்சலையும் வீரம்பற்றியும் அறிந்து கொண்டார். நாலு கோட்டையிலுள்ள பெரியஉடையத்தேவருக்கு ஆயிரம் ஆயுதம் தாங்கிய போர் வீரர்களை பராமரிக்க போதுமானஅளவு நிலத்தை ஒதுக்கினார்.விஜயரகுநாதசேதுபதி என்பவர் கிழவன்சேதுபதி இறந்த பிறகு 1710 ஆம் ஆண்டில் ராமநாதபுரத்தின் 8 வது அரசராக ஆனார். அவரது மகள் அகிலாண்டேஸ்வரி நாச்சியார், நாலு கோட்டையிலுள்ள பெரியஉடையத்தேவரின் மகன் சசிவர்ண தேவருக்கு திருமணம் செய்துவைக்கப்பட்டார்.

மன்னர் விஜயரகுநாதசேதுபதி சசிவர்ண தேவருக்கு வரதட்சணையாக நிலங்கள், வரிவிலக்கு மற்றும் 1,000 போர் வீரர்களை பராமரிக்க போதுமான நிதியினை கொடுத்தார். அவர் மேலும் பிரான்மலை, திருப்பத்தூர், சோழபுரம் மற்றும் திருப்புவனம், தொண்டி முதலிய துறைமுக பொறுப்பையும் கொடுத்தார்.இதற்கிடையில், கிழவன்சேதுபதி மகனான பவானி சங்கரன் ராமநாதபுரம் பிரதேசத்தை கைப்பற்றி, ராமநாதபுரத்தின் 9 வது மன்னனான சுந்தரேஸ்வர ரெகுநாதசேதுபதி என்பவரை கைது செய்தார். பின்பு பவானி சங்கரன் தன்னை ராம்நாதபுரம் பிரதேசத்தின் ராஜா என்று பிரகடனம் செய்தார். அவர் ராமநாதபுரம் பிரதேசத்தின் 10 வது மன்னராக 1726 முதல் 1729 வரை ஆட்சி செய்தார்.

நாலுகோட்டையிலுள்ள சசிவர்ண தேவருடன் அவர் சண்டையிட்டு சசிவர்ண தேவரை நாலுகோட்டைபாளையத்திலிருந்து வெளியேற்றினார். சுந்தரேஸ்வர ரெகுநாதசேதுபதிவின் சகோதரர் கட்டய தேவர் ராமநாதபுரத்தில் இருந்து தஞ்சாவூருக்கு சென்று தஞ்சாவூர் ராஜாவிடம் அடைக்கலம் புகுந்தார். காளையார்கோவில் காடுகளின் வழியாக சசிவர்ண தேவர் சென்று கொண்டிருந்த போது, அவர் சிவகங்கை என்ற நீருற்று அருகே உள்ள ஒரு நாவல் மரத்தின் கீழ்தியானம் செய்து கொண்டிருந்த சாத்தப்பையா என்ற ஒரு முனிவரை சந்தித்தார். பதவி நீக்கம் செய்யப்பட்ட ராஜா சசிவர்ண தேவர் அவருக்கு முன்பாக நின்று, அவரது வாழ்க்கையில் முந்தைய துயர சம்பவங்களை விவரித்தார் முனிவராகிய ஞானி ராஜா சசிவர்ண தேவரின் காதுகளில் ஒரு மந்திரத்தை மந்திர உபதேசம் செய்து பின்பு ஊக்கப்படுத்தி, தஞ்சாவூருக்கு செல்லும்படி அறிவுறுத்தினார். சசிவர்ண தேவர் தஞ்சாவூருக்கு சென்றார்.சசிவர்ண தேவரின் வீரத்தை சோதித்துப்பார்க்கும் வகையில் தஞ்சாவூர் ராஜ்ஜியத்தில் உள்ள ஒரு பயங்கரமான புலியையும் கொன்றார். பின்பு அங்கு சசிவர்ண தேவர் தன்னைப் போன்ற அகதியாக இருந்த கட்டய தேவரை சந்திக்கிறார். சசிவர்ணா தேவர் மற்றும் கட்டய தேவரின் நல்ல நடத்தையில் திருப்தி அடைந்த தஞ்சாவூர்ராஜா, இராஜ்ஜியங்களை மீண்டும் பெற அவர்களுக்கு உதவி செய்ய விரும்பினார். பவானி சங்கரை வீழ்த்த ஒரு பெரிய இராணுவத்துடன் செல்ல தனது தலவாய்களுக்கு உத்தரவிட்டார். சசிவர்ண தேவர் மற்றும் கட்டய தேவர் ஆகிய இருவரின் வழிகாட்டுதலில் தஞ்சை மன்னரின் ஒரு பெரிய படை ராம்நாதபுரத்திற்குச் சென்றது. அவர்கள் ஒரியூரில் நடைப்பெற்ற போரில் பவானி சங்கரைத்தோற்கடித்து 1730 ல் ராமநாதபுரத்தை கைப்பற்றினர். இவ்வாறு கட்டய தேவர் ராமநாதபுரத்தின் 11 வது அரசராக ஆனார்.

முதலாவது அரசர் சசிவர்ண தேவர் (1730 – 1750)

சசிவர்ண தேவர் போரில் வெற்றி பெற்ற கட்டய தேவர் ராமநாதபுரத்தை ஐந்து பகுதிகளாகப் பிரித்து மூன்று பகுதிகளை தன்னிடம் தக்கவைத்துக்கொண்டார். நாலு கோட்டை சசிவர்ண தேவருக்கு இரண்டு பாகங்களை அவர் வழங்கினார். சசிவர்ண தேவர் ராஜா முத்து விஜயரகுநாத பெரியஉடையனத்தேவர்” என்ற பெயரில் சிவகங்கையை ஆட்சி புரிந்தார்.

இரண்டாவது அரசர் – முத்து வடுக நாத பெரியஉடையத்தேவர் (1750 – 1772)

சசிவர்ண தேவர் 1750 ஆம் ஆண்டில் இறந்து விட்டார். அவரது ஒரே மகன் முத்து வடுகநாத பெரியஉடையத்தேவர் அரசராக பொறுப்பேற்றார். அவர் சிவகங்கையின் இரண்டாம் ராஜா ஆவார். அவரது மனைவி ராணிவேலுநச்சியார் அவருக்கு “நண்பன், தத்துவ ஞானி மற்றும் வழிகாட்டியாக” செயல்பட்டார். தாண்டவராய பிள்ளை சிவகங்கை சமஸ்தானத்தின்(நாட்டின்) திறமையான முதல் அமைச்சராக இருந்தார். முத்து வடுகநாத பெரியஉடையத்தேவர் காலனி ஆதிக்கத்தை எதிர்ப்பதற்க்காக ஆங்கிலேயர்களுக்கு வணிக வசதிகளை வழங்காமல் நிராகரித்து டச்சுக்கார்களுக்கு அதே வணிக வசதிகளை வழங்கினார்.மேலும், ஆங்கிலேயரின் நோக்கம் ஆனது சிவகங்கை ஆட்சியாளரைக்கட்டுப்படுத்தி அவர்களை நவாப்பிற்கு சேவை செய்யவோ அல்லது வரி செலுத்தவோ வைக்க வேண்டியது. மேலும் சிவகங்கையில் டச்சு போன்ற வெளிநாட்டு சக்திகளுடன் உறவுகளை நிறுவுவதில் இருந்து அவர்களை கட்டுப்படுத்துவதே ஆங்கிலேயரின் நோக்கம். ஆங்கிலேயர்கள் சிவகங்கையின் இரு பக்கங்களைத்தாக்க கிழக்கிலிருந்து ஜோசப்ஸ்மித் மற்றும் மேற்கில் இருந்து பெஞ்சூர் 1772 ஆம் ஆண்டு சிவகங்கை பளையம் மீது படையெடுத்தனர். சிவகங்கை பாளைய நாடு முழுவதும் பெரிய முள் நிறைந்திருந்தன. ராஜா முத்து வடுகநாத தேவர், படையெடுப்பை எதிர்பார்த்து, சாலைகளில் தடைகளை அமைத்தார், காளையார்க்கோவில் காடுகளில் அகழிகளை நிறுவினார். 1772 ஆம் ஆண்டின் 21 ஆம்தேதி, ஸ்மித் மற்றும் பெஞ்சூர் ஆகியோர் சிவகங்கை நகரை ஆக்கிரமித்து கைப்பற்றினர். அடுத்தநாள், ஆங்கிலப்படைகள் காளையார்கோவிலுக்கு அணிவகுத்து கீரனூர் மற்றும் சோழபுரம் பகுதிகளை கைப்பற்றின. 1772 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25 ஆம் தேதி சிவகங்கைப் படைகளை பெஞ்சர் முற்றுகையிட்டார். ராஜா முத்து வடுகநாதர் மற்றும் அவரது பல வீரர்களுடன் அந்த வீர போரில் இறந்து விட்டார். வேலுநாச்சியார் முத்து வடுக நாதரை அடைக்கம் செய்து விட்டு விருப்பாச்சி விரைந்தார். தண்டவராயன் பிள்ளை உடன் கைம்பெண் ராணி வேலுநாச்சியார் மற்றும் மகள் வெள்ளச்சிநாச்சியார் திண்டுக்கல்லுக்கு விருப்பாச்சி பாளையம் சென்றனர்.பின்னர் ராணி வேலுநாச்சியாரின் பாதுகாவலர்கள் வெள்ளைமருது மற்றும் சின்னமருது ஆகியோர் இணைந்து கொண்டனர்.

இராணி வேலு நாச்சியார்

மூன்றாவது ராணி வேலு நாச்சியார் (1772 – 1780)

ராணி வேலு நாச்சியார் மற்றும் அவரது மகள் வெள்ளச்சி நாச்சியார் திண்டுக்கல் அருகே விருப்பாச்சிபாளையத்தில் கோயில நாயக்கர் பாதுகாப்பில் கீழ் வசித்து வந்தனர்.வேலுநாச்சியாரை எதிர்த்துப்போராடுவதால் விரக்தியடைந்த நவாப், வேலுநாச்சியார் அவரது மகள் வெள்ளச்சி நாச்சியார் மற்றும் மருதுசகோதரர்கள் சிவகங்கைக்குத்திரும்ப அனுமதிக்கப்பட்டனர் மற்றும் நவாபிற்கு கிஷ்தி செலுத்திவிட்டு நாட்டை ஆள்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். நிர்வாகத்திற்காக அனுமதிக்கப்பட்ட ஒரு உடன்படிக்கை படி ராணி வேலு நாச்சியார் சிவகங்கையை ஆட்சிபுரிவதற்கு சின்னமருதுவை நாட்டின் முதல்அமைச்சராக பணிபுரிவதற்கும் வெள்ளைமருது நாட்டின் தலைமைத்தளபதியாக பணிபுரிவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் கைம்பெண் ராணி வேலு நாச்சியார் தனது கணவனைத்தொடர்ந்து 1780 வரை சிவகங்கையை ஆட்சிபுரிந்தார்.

ராணி வேலு நாச்சியார் நாட்டை நிர்வகிப்பதற்காக மருதுசகோதரர்களுக்கு அதிகாரங்களை வழங்கினார். சில வருடங்களுக்குப்பிறகு ராணி வேலு நாச்சியார் இறந்தார், ஆனால் அவரது இறப்பு குறித்த சரியான தேதி தெரியவில்லை (அது சுமார் 1796ஆக இருக்கலாம்).

மருது சகோதரர்கள்

மருது சகோதரர்கள்

மருது சகோதரர்கள் உடையார் சேர்வை என்ற மூக்கையா பழனியப்பன் சேர்வை மற்றும் ஆனந்தாயி என்ற பொன்னாத்தாள் தம்பதிகளின் மகன்கள். அவர்கள் ராமநாதபுரத்தில் உள்ள கொங்காலு தெருவில் இருந்து வந்தவர்கள். அவர்கள் பண்டைய பாளையகாரர்கள் வழி வந்தவர்களோ அல்லது அச்சாதியில் பிறந்தவர்கள் அல்ல.சேர்வைக்காரன் என்பது சாதிப்பெயராகும் மருது என்பது குடும்பபெயராகும் ஆகும். மருது சகோதரர்கள் முத்து வடு கநாததேவரின் கீழ் பணியாற்றினர். பின்னர் அவர்கள் தளபதி நிலைக்கு உயர்த்தப்பட்டனர். பூமாராங்க்(வளரி) என்பது இந்தியாவில் உள்ள விசித்திரமான ஆயுதம். இந்த ஆயுதங்களின் இரண்டு வடிவங்கள் இந்தியாவில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ஆயுதங்கள் பொதுவாக மரத்தினால் செய்யப்பட்டவை. இதன் மேல் பகுதி கனமானதாகவும், வெளிப்புற விளிம்பில் கூர்மையாகவும் இருக்கும். தமிழ்மொழியில் அவைகளின் பெயர் வளரிகுச்சி என்பதாகும். மருது சகோதரர்கள் வளரிகுச்சியை எறியும் கலையில் வல்லுநர்கள் என்று கூறப்படுகிறது. ஆங்கிலேயர்களுக்கு எதிரான பாளையப்போர்களில் மருது சகோதரர்கள் வளரி ஆயுதத்தைப்பயன்படுத்தினார் என்று கூறப்படுகிறது. 12,000 ஆயுதம் தாங்கிய வீர்களுடன் மருது சகோதரர்கள் சிவகங்ககைச்சூழ்ந்தனர் மற்றும் நவாபின் பிரதேசங்களை சூறையாடினர். 1789 மார்ச் 10 ம் தேதி நவாப் சென்னை கவுன்சிலுக்கு உதவிக்காக முறையிட்டார். ஏப்ரல் 29, 1789 அன்று பிரிட்டிஷ் படைகள் கொல்லங்குடியில் மருது படைகளை தாக்கின. இங்கு நடைப்பெற்ற பெரியசண்டையில் பிரிட்டிஷ்படைகள் மருதுபடைகளினால் தோற்கடிக்கப்பட்டது.

பாஞ்சாலங்குறிச்சியின் மன்னன் வீரபாண்டியகட்டபொம்மனுடன் மருதுசகோதரர்கள் நெருங்கிய தொடர்பில் இருந்தனர். மருதுசகோதரர்களுடன் கட்டபொம்மன் அடிக்கடி ஆலோசனைகளை நடத்தினார். கயத்தாறில் 1799 அக்டோபர் 17 இல் கட்டபொம்மனுக்கு மரணதண்டனை நிறைவேற்றிய பின்பு சின்னமருது கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரைக்கு சிவகங்கையில் தஞ்சம் அளித்தார். அவர் இந்துக்கள், முஸ்லிம்கள் அனவரும் ஆங்கிலேயருக்கு எதிராகப்போராட தென்னிந்தியத் தீபகற்பத்திலுள்ள மக்களுக்கு ஒரு ஜம்பு தீபப்பிரகடனத்தை அறிவித்தார். கடைசியில், ஆங்கில மேலாதிக்கத்திலிருந்து தாய்நாட்டை விடுவிக்க போராடிய காரணத்திற்காக மருதுபாண்டியர்கள் கைது செய்யப்பட்டனர். 1801 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24 ம் தேதி சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள கோட்டையின் சிதறல்கள் மீது போராளிகளான மருதுபாண்டியனுக்கும், அவரது சகோதரன் வெள்ளைமருதுக்கும் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. 1801 ஆம் ஆண்டின் இறுதிப்போராட்டத்தின் போது அவர்கள் உறுதிப்பாடுடன் போரிட்டனர். ஆங்கிலேய படைகள் கைப்பற்று வதைத்தடுப்பதற்காக அவர்களின் அழகிய சிறுவயல் கிராமத்திற்கு தீவைத்தனர்.

மருது சகோதரர்கள் போர் நடவடிக்கைகள் மட்டுமல்லாது, துணிச்சலுக்காகவும் குறிப்பிடத்தக்கவர்கள்., மேலும் அவர்கள் மிக பெரிய நிர்வாகிகளாக இருந்தனர். 1783 முதல் 1801 வரையிலான காலப்பகுதியில், மக்கள் நலனுக்காக அவர்கள் பணியாற்றினர், சிவகங்கை சீமையை வளமானதாக அக்கினர். அவர்கள் பல குறிப்பிடத்தக்க கோயில்களையும் காளையார்கோவில் குடமுழுக்கு செய்தது மற்றும் ஊரணிகள், கண்மாய்கள் ஆகியவற்றைக்கட்டினார்கள். பின்னர், சட்டரீதியிலான வாரிசுகள் பல தலைமுறைகளாக ஆட்சி செய்தனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் டி.சண்முகராஜா அவருக்கு பின்பு ஸ்ரீ டி.எஸ். கார்த்திகேய வெங்கடாசலபதி ராஜா ஆட்சி புரிந்தார். 108 கோயில்கள், 22 கட்டளைகள் மற்றும் 20 சத்திரங்கள் கொண்ட சிவகங்கை தேவஸ்தானம் மற்றும் சத்திரங்களின் பரமபரை அறங்காவலராக ஸ்ரீ. டி.எஸ். கார்த்திகேய வெங்கடாசலபதி ராஜா இருந்தார். ஸ்ரீ. டி.எஸ். கார்த்திகேய வெங்கடாசலபதி ராஜா 30.8.1986 ல் இறந்தார். அவரது ஒரே மகள் DSK மதுராந்தக நாச்சியார் அவரது வாரிசாக. சிவகங்கை அரச குடும்பத்தின் எஸ்டேட், தேவஸ்தானம் மற்றும் சத்திரங்களை இப்போது நிர்வகிக்கிறார். 1990 ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தின் “மாவட்டகெஜட்” மற்றும் சிவகங்கை மாவட்டத்தின் சிவகங்கை வரலாறு ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்ட சிவகங்கை மாவட்டம் சிவகங்கை ஜமீன் பகுதி மற்றும் ராமநாதபுரம் ஜமீனின் ஒரு பகுதியை இணைத்து உருவாக்கப்பட்டது.